ஓஹோ.. ரூட்டு அப்டி போகுதா.. இப்படித்தான் பேட்மிண்டன் சாம்பியன் ஆனராம் நிவேதா பெத்துராஜ்..!

ஓஹோ.. ரூட்டு அப்டி போகுதா.. இப்படித்தான் பேட்மிண்டன் சாம்பியன் ஆனாராம் நிவேதா பெத்துராஜ்..!

நிவேதா பெத்துராஜ், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக அழகான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த தமிழ்நாட்டு பெண். ஆனால் சிறுவயதிலேயே துபாய் சென்ற நிலையில், அங்கு வளர்ந்து பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து தமிழகம் திரும்பி இருக்கிறார்.

ஒருநாள் கூத்து என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். உதயநிதியுடன் பொதுவான எம்மனசு தங்கம், ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன்.திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நிவேதா பெத்துராஜ் நடித்த படங்களில் கதாநாயகியாக இருந்தாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, தேவையான அளவுக்கு தாராளமாக கவர்ச்சி காட்டினார்.

தனது அழகான உடல் பாகங்களை காட்டும் இறுக்கமான மாடர்ன் ஆடைகளில் வந்து அசத்தினார். திமிரு புடிச்சவன் படத்தில், போலீஸ் எஸ்ஐ யூனிபார்மிலும் கிளாமராக காணப்படுவார் நிவேதா பெத்துராஜ்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு நிவேதா பெத்துராஜூக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. விஜய், அஜீத், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

விளையாட்டில் வெற்றி..

இதையடுத்து கலைத்துறையில் இருந்து கவனத்தை திசைமாற்றிய நிவேதா பெத்துராஜ் சமீபகாலமாக விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக முறையான பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

இதன் காரணமாக விளையாட்டில் வெற்றி பெற்று வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

நடிப்புக்கு முழுக்கு..

இளமையும் அழகும் இருக்கும் வரைதான் சினிமாவில் நடிகைகள் நீடித்திருக்க முடியும். ஆனால் சில படங்களிலேயே மார்க்கெட் இழந்த நிவேதா பெத்துராஜ் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்தார்.

இதையடுத்து நடிகை நிவேதா பெத்துராஜ் சில மாதங்களுக்கு முன்பு கார் ரேஸ் வீராங்கனையாக கார் ஓட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகின.

இந்நிலையில் தற்போது பேட்மிண்டன் போட்டியிலும் சாம்பியன் ஆகியிருக்கிறார்.

இதை அறிந்த ரசிகர்கள் நடிகை நிவேதா பெத்துராஜ் ஒட்டுமொத்தமாக சினிமாவை தலைமுழுகி விட்டு முழுவதும் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்துவார் போல் தெரிகிறது

சினிமா இனி வேண்டாம். நாம் சாதிக்க சரியான இடம் விளையாட்டுத்துறைதான் என முடிவு செய்ததால், இதுதான் இவர் சாம்பியன் பட்டம் வெல்லும் அளவுக்கு கொண்டு சென்று இருக்கிறது.

விளையாட்டு துறையில் நிவேதா பெத்துராஜிற்கு சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.