Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

நிஜ வாழ்க்கையில் நிழல்கள் ரவி யார்..? பலரும் அறியாத அவருடைய மனைவி.. கடந்து வந்த சோக பாதை..!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் சில நடிகர்கள் பற்றிய விழிப்புணர்வே பெரிய அளவில் ரசிகர்களுக்கு இல்லாமல் போய் விடுகிறது. மிகச்சிறந்த கலைஞர்களாக அவர்கள் இருந்தும் துணை நடிகர்களாக, இரட்டை நாயகர்களில் ஒருவராக இப்படியே அவர்களது கலைப் பயணம் முடிவுக்கு வந்து விடுகிறது.

நிழல்கள் ரவி

இயக்குனர் பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நிழல்கள் ரவி. கடந்த 1980களில் துவங்கி இதுவரை 44 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சில படங்களில் ஹீரோவாக, சில படங்களில் இரண்டு நாயகர்களில் ஒருவராக, சில படங்களில் வில்லனாக, சில படங்களில் குணச்சித்திர நடிகராக என பல படங்களில் தன் நடிப்பு ஆளுமையை வெளிப்படுத்திய மிகச்சிறந்த நடிகர் நிழல்கள் ரவி.

துள்ளி துள்ளி போகும் பெண்ணே…

கடந்த 1990களில் கண் பார்வையற்றவராக அவர் நடித்த வெளிச்சம் படத்தில், துள்ளி துள்ளி போகும் பெண்ணே, சொல்லிக்கொண்டு போனால் என்ன, கண்ணே உந்தன் பேர் என்ன, வெள்ளிக்கொலுசு போகும் திசையில் பாவி நெஞ்சு போவதென்ன? என்ற பாடலில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

--Advertisement--

இதையும் படியுங்கள்: “எல்லாமே பச்சையா தெரியுது..” இன்ஸ்டாவை கதற விட்ட ரம்யா பாண்டியன்..!

டப்பிங் கலைஞர்

நான் பெத்த மகனே, நான் புடிச்ச மாப்பிள்ளை, சின்னதம்பி பெரிய தம்பி, தர்மதுரை, அண்ணாமலை என பல படங்களில் நடித்திருக்கிறார். நிழல்கள் ரவி டப்பிங் கலைஞர். அவரது கம்பீரமான குரலில், அமிதாப் பச்சன், அனந்த நாக் (கேஜிஎப் படம்) நானா படேகர் போன்ற பிரபல நடிகர்களுக்கு தமிழில் பின்னணி பேசியிருக்கிறார். காமெடி நடிப்பிலும், நிழல்கள் ரவி சில படங்களில் அசத்தியிருப்பார்.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கடம்பூர் சம்பவராயர் கேரக்டரில் நடித்திருந்தார் நிழல்கள் ரவி.

 

 

மனைவி விஷ்ணுப்பிரியா

கோவையை சொந்த ஊராக கொண்ட நிழல்கள் ரவி, கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படி்ததவர். இவரது முழுப்பெயர் ரவிச்சந்திரன், கடந்த 1986ம் ஆண்டில் விஷ்ணு பிரியா என்பவரை திருமணம் செய்த நிழல்கள் ரவிக்கு, 1988ம் ஆண்டில் ராகுல் ரவி என்ற மகன் பிறந்தார்.

மகன் ராகுல் ரவி திருமணம்

அவருக்கு கடந்த 2017ம் ஆண்டில் மிகச்சிறப்பாக திருமணத்தை நடத்தி முடித்தார் நிழல்கள் ரவி. திருமண விழாவில் இளையராஜா, சிவக்குமார் போன்றோர் பங்கேற்று மணமக்களைவாழ்த்தினர்.

இதையும் படியுங்கள்: ‘‘யப்பா.. சரியான நாட்டுக்கட்ட.. ஓவர் டைட்டான பேண்ட்..” சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ படு சூடான போஸ்..!

வடக்குப்பட்டி ராமசாமி

தற்போது வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நிழல்கள் ரவியின் காமெடி நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

நிஜ வாழ்க்கையில் நிழல்கள் ரவி இன்னும் ஒரு சாதாரண நடிகராக தான் இருந்து வருகிறார். பலரும் அறியாத அவருடைய மனைவி, மகனின் புகைப்படங்கள் இப்போதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சோகங்கள் நிறைந்த பாதை

கடந்த 1980 முதல் 44 ஆண்டுகளாக நிழல்கள் ரவி கடந்து வந்த சினிமா பயணம் சோகங்கள் நிறைந்த பாதையாக தான் இருந்திருக்கிறது. ஏனெனில் அழகு, திறமை இருந்தும் பெரிய அளவில் அவரால் முன்னணி நடிகராக சாதிக்க முடியவில்லை.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top