Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இதுக்கு ஆசைப்பட்டு அவனுக்கு 4வது பொண்டாட்டியா போயிட்டா.. பவித்ராவை கழுவி ஊத்தும் முன்னாள் கணவர்..!

Tamil Cinema News

இதுக்கு ஆசைப்பட்டு அவனுக்கு 4வது பொண்டாட்டியா போயிட்டா.. பவித்ராவை கழுவி ஊத்தும் முன்னாள் கணவர்..!

சினிமா நடிகைகள் மட்டுமல்ல, பெண்களை பொருத்தவரை ஒரு சிலர் அழகான ஆண்கள் மீது அதிக ஆர்வமும் விருப்பமும் கொண்டிருப்பர். பெரும்பாலானவர்கள் சொத்து, கார், பங்களா போன்ற வசதிகளின் மீது அதிக விருப்பம் கொண்டிருப்பர்.

காதலரை தேர்வு செய்வதில் கூட அவரது பின்புலம் அறிந்த பிறகுதான் தங்களது காதலை வெளிப்படுத்துவர். இது சுயநலமாக தெரிந்தாலும் கூட வசதியான வாழ்க்கை, சொகுசான ஆடம்பரமான வாழ்க்கை வாழவே பலருக்கும் ஆசை, கனவுகளும் இருக்கின்றன. இதில் குற்றம் சொல்ல ஏதுமில்லை என்பதும் பொதுவான ஒரு பார்வையாக தான் இருக்கிறது.

கன்னட நடிகை பவித்ரா

கன்னட நடிகை பவித்ரா, பார்த்தவுடன் அடடா என ஆச்சரியப்படுத்தும் ஒரு அழகியாக தான் இந்த வயதிலும் அசத்துகிறார். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

வீட்ல விசேஷம் படத்தில் கதாநாயகி அம்மாவாக நடித்திருப்பார். சென்னை தமிழில், அயோக்யா, கௌரவம், கபெ ரணசிங்கம் போன்ற படங்களில் நடித்த வகையில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பவித்ரா நன்கு பரிச்சயமானவர்தான்.

--Advertisement--

இரண்டுமுறை திருமணமாகி விவாகரத்து

பவித்ரா ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆனவர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் நரேஷை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நரேஷ் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இப்போது 3வது மனைவி ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்து அவரையும் சமீபத்தில் விவாகரத்து செய்திருக்கிறார்.

மைசூரு ஓட்டல் ஒன்றில்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைசூருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடிகர் நரேஷூம், நடிகை பவித்ராவும் ஒரே அறையில் தங்கியிருந்த போது, தகவலறிந்து அங்கு வந்த நரேஷின் 3வது மனைவி, ரம்யா ரகுபதி இருவரையும் செருப்பால் அடிக்க பாய்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

துபாயில் ஹனிமூன்

பின்னர் அங்கிருந்த போலீசார் நடிகர் நரேஷ், பவித்ரா இருவரையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சில மாதங்களில் நரேஷ் – பவித்ரா இருவரும் திருமணம் செய்துக்கொண்டு துபாய்க்கு ஹனிமூன் சென்றனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டது. இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார் நடிகை பவித்ரா.

இதையும் படியுங்கள்: பாய்ஸ் படத்தில் ஜெனிலியாவுக்கு பதிலா நடிக்க இருந்தது இந்த நடிகையா..? நல்ல வேளை நடிக்கல..

எதை வேண்டுமானாலும் செய்வார்

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகை பவித்ராவின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் கலந்துக்கொண்டார். அப்போது அவர் தனது முன்னாள் மனைவி, நடிகை பவித்ரா குறித்து கூறுகையில், பவித்ரா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர் என்பதால் அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்.

 

 

 

சொத்துக்கு ஆசைப்பட்டு…

அதற்காக மிகப்பெரிய திட்டம் ஒன்றை போட்ட பவித்ரா, நடிகர் நரேஷ் பாபுவின் 1500 கோடி ரூபாய் சொத்துக்கு ஆசைப்பட்டு, அந்த சொத்தை அபகரிக்க தான் அவரை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அய்யோ கடவுளே.. கடைசி வரை நிறைவேறாமலே போன டேனியல் பாலாஜியின் ஆசை.. ரசிகர்கள் கண்ணீர்..!

பணத்துக்கான என்னை விவாகரத்து செய்த பவித்ராவை, அவரது இப்போதைய கணவர் நரேஷ், இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை. என்றாவது ஒருநாள் பவித்ராவை பற்றி அவருக்கு தெரிய வரும். அப்போதுதான் பவித்ரா எப்படிப்பட்டவர் என்பதை நரேஷ் புரிந்துக்கொள்வார் என அவர் ஆவேசமாக கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

1500 கோடி ரூபாய் சொத்துக்கு ஆசைப்பட்டு அவனுக்கு 4வது பொண்டாட்டியா போயிட்டா என்று கசப்பான அந்த உண்மையை, மீடியா மூலமாக நடிகை பவித்ராவை கழுவி ஊத்தியிருக்கிறார் அவரது முன்னாள் கணவர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top