திரையுலகில் கதாநாயகியாக ஜொலிக்க வேண்டுமென்றால் மேன்மையுடைய அழகு, நடிப்பு இருந்தால் மட்டும் போதாது சில அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். இல்லையெனில், உள்ளே நுழைந்த உடனேயே அல்லது சில நாட்களுக்குள் கதை கந்தல் ஆகிவிடும். சிலருக்கு பிறவியிலேயே அதிர்ஷம் இருக்கும் அதாவது சினிமா துறையினரின் வாரிசாக இருப்பார்கள்.
இன்னும் சிலர் அதிர்ஷ்டத்தை பெற பல பல வழிகளில் முயற்சி செய்து பெறுவார்கள். அப்படி அம்சமான அழகு.. நடிப்பு திறமை இருந்தும் முன்னணி நாயகியாக முடியாமல் திணறுபவர்கள் பட்டியலில் பூனம் பஜ்வா முதலிடத்தில் உள்ளார்.
கோலிவுட்டில் ‘சேவல்’ மூலம் அறிமுகமானார் அம்மணி. பின்னர் அவர் பாஸ் மற்றும் ரன் போன்ற படங்களில் தனது நடிப்பால் ஈர்க்கப்பட்டார். அப்போது அழகுக்கும், நடிப்புக்கும் பஞ்சமில்லாமல் இருந்ததால், இண்டஸ்ட்ரிக்கு இன்னொரு நாயகி கிடைத்துவிட்டதாக எல்லோரும் நினைத்தார்கள்.
ஆனால் பின்னர்.. யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, காட்சி தலைகீழாக மாறியது. பூனம் பஜ்வா வெள்ளித்திரையில் இருந்து மெல்ல நழுவிவிட்டார். பின்னர் தமிழ், மலையாளம், கன்னடம் என ஆங்காங்கே சில நாட்கள் படங்களுக்கு இடைவெளி கொடுத்து நடித்து வந்தார்.
இந்த சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘குருமூர்த்தி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் முன் வர தயாராகி வருகிறது. நடராஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை பிரண்ட்ஸ் டாக்கீஸ் பேனரில் சிவ சலபதி மற்றும் சாய் சரவணன் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதையும் படிங்க : “அனுமதி எல்லாம் வேண்டாம்..” – நீச்சல் உடையில் கவர்ச்சி விருந்து வைத்துள்ள நடிகை கனிகா – வைரல் புகைப்படம்..!
முன்னணி ஒளிப்பதிவாளர் கேட்டி தனசேகர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார்? அவர் அவற்றை எவ்வாறு உடைத்து தனது நேர்மையை நிரூபித்தார். போன்ற பல சுவாரசியமான சம்பவங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் இப்படம் கோடைகால ஸ்பெஷலாக ஏப்ரல் மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பட வாய்புகளை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் பூனம் பாஜ்வா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய பிறந்தநாளான இன்று இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், வெள்ளை தக்காளி என்று அவரது அழகுகளை வர்ணித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.