நடிகர் பிரபு இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்.. ஒரு பார்வை..!

நடிகர் பிரபு இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்.. ஒரு பார்வை..!

தமிழ் சினிமாவில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை வாரிசு நடிகர்கள், நடிகைகள் தொடர்ந்து வந்தவண்ணம்தான் இருக்கின்றனர். அந்த வகையில் சிவாஜி, எம்ஆர் ராதா, சிவக்குமார், நாகேஷ், அசோகன், முத்துராமன் போன்றவர்களின் வாரிசுகள் களத்தில் உள்ளனர். அதே போல் அடுத்த தலைமுறையில் கார்த்திக், பிரபு, முரளி, சத்யராஜ், சரத்குமார், கமல், விஜயகாந்த் போன்றவர்களின் வாரிசுகளும் இன்றைய சினிமா களத்தில் நிற்கின்றனர்.

சிவாஜி கணேசன் மகன் பிரபு

அந்த வகையில் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் பிரபு, தமிழ் சினிமாவில் சங்கிலி என்ற படம் மூலம் அறிமுகமானார். முதலில் சில படங்களில் நடித்த பிரபுவுக்கு நடிகர் சிவாஜி கணேசன் மகன் என்ற அடையாளம் மட்டுமே இருந்தது.

அதன்பிறகு உரிமை கீதம், சின்னப்பூவே மெல்லப் பேசு, பிள்ளைக்காக, என் தங்கச்சி படிச்சவ போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக பிரபு முன்னேறினார். அதன்பிறகு பி வாசு இயக்கத்தில் சின்னத்தம்பி படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

கொண்டாடப்பட்ட சின்னத்தம்பி

பிரபு திரை பயணத்தில் சின்னதம்பி படத்துக்கு முந்தைய படங்களை போல, அதற்கு பின் வந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை என்றே சொல்லலாம்.

இதையும் படியுங்கள்: அந்த நடிகர் என்னை தூக்கி மேல போட்டுகிட்டாரு.. மயங்கி கிடந்தேன்.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

நடிகர் பிரபுவுக்கு பல படங்களில் இரட்டை கதாநாயகர் படங்கள் நல்ல வெற்றியை தந்திருக்கிறது. அந்த வகையில் அக்னி நட்சத்திரம், சின்னதம்பி பெரியதம்பி, குருசிஷ்யன், தர்மத்தின் தலைவன், வெற்றி விழா, சந்திரமுகி போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

பிரபு நிறைய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார், சின்ன மாப்ளே போன்ற சில படங்களில் ஒருவரே இருவர் போல ஏமாற்றும் படங்களிலும் நடித்திருக்கிறார்.

தராசு

பிரபுவின் அப்பா சிவாஜி கணேசன் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. சில படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாகவும் இருந்திருக்கின்றன. ஆனால் சிவாஜி படங்கள் ஏதாவது ஒரு விதத்தில் ரசிகர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். ஏதேனும் முக்கியத்துவத்தை அந்த படத்தில் காண முடியும்.

ஆனால் அப்படி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போன படம்தான் தராசு.

இதையும் படியுங்கள்: வெளங்கிடும்.. ஓரினச்சேர்க்கை குறித்து அம்மு அபிராமி சொல்றத கேட்டியளா..?

முதல் இரட்டை வேடம்

இந்த படத்தில்தான் நடிகர் பிரபு முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். கடந்த 1984ம் ஆண்டில் வெளியான இந்த படத்தை டைரக்டர் ராஜகணபதி டைரக்ட் செய்திருந்தார்.

நான்தான்யா சிலுக்கு சிலுக்கு

சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக கேஆர் விஜயாவும், பிரபுவுக்கு ஜோடியாக அம்பிகாவும் இந்த படத்தில் நடித்திருந்தனர். அவர்களுடன் எஸ் வரலட்சுமி, வி கே ராமசாமி, எம் என் நம்பியார், சிகே சரஸ்வதி, கல்லாப்பட்டி சிங்காரம், சில்க் ஸ்மிதா, வடிவுக்கரசி என பல பிரபல நடிகர் நடிகையர் நடித்திருந்த இந்தபடம் கமர்ஷியல் பேக்கேஜாக வெளியான இந்த படம், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இந்த படத்தில் நான்தான்யா சிலுக்கு சிலுக்கு என சில்க் ஸ்மிதா குத்தாட்டம் போட்டும் படம் எடுபடவில்லை. இப்படி பிரபு இரட்டை வேடத்தில் நடித்த முதல் படம் தராசு, மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

   

--Advertisement--