வரம்பு மீறிய தனுஷ்.. ரஜினி மகள்கள் குடுமிபிடி சண்டை.. இறுதியில் நடந்தது என்ன..? பிரபல நடிகர் ஓப்பன் டாக்..

வரம்பு மீறிய தனுஷ்.. ரஜினி மகள்கள் குடுமிபிடி சண்டை.. இறுதியில் நடந்தது என்ன..? பிரபல நடிகர் ஓப்பன் டாக்..

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். சில படங்கள் அவருக்கு பிளாப் ஆனாலும் அடுத்தடுத்த படங்களில் வெற்றியை கொடுத்து முன்னிலையில், முதலிடத்தில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,

ரஜினிகாந்தின் இரண்டு மகள்கள் மூத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 2வது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இருவருமே சினிமாத்துறையில் டைரக்‌ஷனில் மிக ஆர்வம் கொண்டவர்கள்.

கோச்சடையான்

10 ஆண்டுகளுக்கு முன், கோச்சடையான் என கார்ட்டூன் படத்தை, நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கினார் சௌந்தர்யா. ஆனால் படம் வெற்றி பெறவில்லை. ரஜினி இருக்கும்போது, அவரது கார்ட்டூன் படத்தை ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை.

லால் சலாம் பிளாப்

அடுத்து, மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் நடிப்பில், 3 என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பிளாப் ஆனது. அடுத்து கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படத்தை 2வதாக ஐஸ்வர்யா டைரக்ட் செய்தார். அந்த படமும் தோல்வியடைந்தது.

அதன்பின் சில ஆண்டுகள் அமைதியாக இருந்த ஐஸ்வர்யா, மீண்டும் டைரக்டராக களத்தில் இறங்கினார். லால் சலாம் என்ற படத்தை டைரக்ட் செய்தார். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படமும் பிளாப் ஆகி விட்டது.

இதையும் படியுங்கள்:  திரிஷா தான் எனது பொண்டாட்டி.. நடிகர் விஜய்யை மோசமாக திட்டிய சூர்யா.. என்ன நடந்தது..?

சித்தார்த்

இதையடுத்து இப்போது மீண்டும் 4வது ஒரு படம் டைரக்ட் செய்ய தயாராகி விட்டார். ஐஸ்வர்யா இந்த முறை படத்தின் கதாநாயகனாக நடிகர் சித்தார்த்தை தேர்வு செய்திருக்கிறார்.

கதையை கேட்டு ஓகே செய்த சித்தார்த், முழுக்கதை ஸ்கிரிப்டை கொண்டு வாருங்கள் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே ரஜினிகாந்த் 2வது மகள் செளந்தர்யாவும் ஒரு படத்தை டைரக்ட் செய்ய முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

கேமியோ ரோல்

ஏற்கனவே லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து படம் பிளாப் ஆனது. ஆனால் இந்த படத்தில் நடிக்க மறுத்தால், அக்கா படத்தில் மட்டும் நடிப்பீர்கள், என் படத்தில் நடிக்க மாட்டீர்களா என கேட்டு விடுவாரே சௌந்தர்யா, என்பதற்காகவே இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த்.

தனது 4வது படத்தில் சித்தார்த்தை நடிக்க கேட்பதற்கு முன்பு, தங்கை சௌந்தர்யாவின் கணவரை தன் படத்தில் நடிக்க வருமாறு அழைத்துள்ளார் ஐஸ்வர்யா. சௌந்தர்யாவின் கணவர், ஏற்கனவே சில படங்களில் நடித்தவர். நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர்.

என் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்

தன் கணவரை, அக்கா ஐஸ்வர்யா நடிக்க அழைப்பதை அறிந்து ஆவேசமடைந்த சௌந்தர்யா, என் கணவர் அவரது தொழிலை கவனிக்கட்டும். அவர் நடிக்க சென்றால், என் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார். இனிமேல் என் கணவரை, நடிக்க அழைக்க வேண்டாம் என்று பேசியிருக்கிறார்.

இதனால் அக்கா, தங்கை இருவருக்கும் இடையே வாக்குவாதமும், கடுமையாக சண்டையும் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தகவலறிந்த ரஜினிகாந்த் அங்கு வந்து, குடும்பத்தில் நான் ஒருவன் மட்டும் நடித்தால் போதும். ஆண்டவன் புண்ணியத்தில் நிறைய சொத்து இருக்கிறது.

சண்டை போடாதீர்கள்

சினிமாவை மையமாக வைத்து சண்டை போடாதீர்கள் என்று அறிவுரை தந்திருக்கிறார்.

ரஜினி மகள்கள் குடுமிபிடி சண்டையில் இறுதியில் ரஜினிகாந்த் வந்து சமாதானப்படுத்திய விஷயத்தை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஓப்பனாக இந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யா, அவர் வரம்பு மீறி நடந்துக்கொண்டதால் 2ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியை போலவே கணவர் தனுஷூம் இப்போது 2 படங்களை டைரக்ட் செய்து வருகிறார்.