“எண்ணெய் உணவை அதிகமா சாப்பிட்டீங்களா..! – அப்ப இது செஞ்சா நெஞ்சு எரிச்சல் ஏற்படாது..!

பொதுவாக சிலருக்கு வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை உண்ண வேண்டும் என்ற அலாதி பிரியம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் உணவின் சுவையை பார்த்து அளவுக்கு அதிகமாக அந்த பொருட்களை உண்டு விடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு செரிமான பிரச்சனை ஏற்பட்டு அவதிக்கு உள்ளார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு வயிற்று எரிச்சலும் ஏற்படக்கூடும்.எனவே அவர்கள் வயிற்று எரிச்சலில் இருந்து விடுபடக்கூடிய எளிய குறிப்புகளை இந்த பதிவில் படித்து நீங்கள் பயன்படுத்தலாம்.

நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றெரிச்சலில் இருந்து விடுபட உதவும் குறிப்புகள்

அதிகமான எண்ணெய் பண்டங்களை நீங்கள் சாப்பிட்டு விட்டால் அது எளிதில் ஜீரணமாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சுடு நீரை குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதன் மூலம் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் வயிற்று எரிச்சல் ஏற்படாது.

அபரிமிதமான எண்ணெய் பண்டங்களை நீங்கள் சாப்பிட்ட பிறகு கிரீன் டீ குடிப்பது மிகவும் நல்லது. இதில் இருக்கக்கூடிய வேதிப்பொருள் உங்கள் ஜீரண மண்டலத்தை ஊக்கப்படுத்தி எளிதில் செரிமானத்தை ஏற்படுத்தித் தரும்.

வறுத்த சீரகத்துடன் சிறிதளவு தயிரை சேர்த்து சாப்பிடுவதின் மூலம் செரிமான பிரச்சனைகள் ஏற்படாது. தயிரில் இருக்கும் பாக்டீரியா அமிலத்தன்மையை கட்டுப்படுத்தி குடல் இயக்கத்தை வேகப்படுத்தும்.

--Advertisement--

எண்ணெய் உணவு சாப்பிட்ட மறுநாள் நீங்கள் நாசத்து நிறைந்த முழு தானியங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் கொலஸ்ட்ராலின் அளவை சமப்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல் உங்களை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவி செய்யும்.

எண்ணெய் உணவுகளை சாப்பிட்ட பிறகு குளிர்ச்சியாக நீங்கள் ஐஸ்கிரீமை சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிடுவதின் மூலம் உங்கள் வயிறு மற்றும் கல்லீரலில் அழுத்தம் அதிகரித்து செரிமானத்தை இது குறைத்து விடும்.

உங்கள் செரிமானத்தை அதிகரிக்க சில நட்ஸ்  சாப்பிடுவதின் மூலம் செரிமானப் பிரச்சனையை நீங்கள் தடுத்துவிடலாம். குறிப்பாக வால்நட்டை சாப்பிடுவது மிகவும் சிறப்பானது.

அதிக அளவு கலோரி உள்ள உணவுகளை சாப்பிட்ட உடனேயே நீங்கள் உறங்குவது தவறானது. சில மணி நேரம் கழித்து உறங்குவதின் மூலம் உங்கள் செரிமானம் மிக நன்றாக நடக்கும். இல்லை என்றால் அதில் சிரமம் ஏற்படும்.

உணவு அருந்திய பிறகு அரை மணி நேரம் ஆவது நடைபயிற்சியை மேற்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.