Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஹே.. எப்புர்ரா..ஒரு பக்கம் முழுசா தெரியுதே.. இணையத்தை மிரள வைத்த நடிகை சதா..!

என்னதான் சிறந்த அழகியாக நடிகைகள் இருந்தாலும், சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே, ஒரு நடிகையால் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, நீண்ட காலம் சினிமாத்துறையில் நீடித்திருக்க முடியும்.

அதற்கு நல்ல படங்களும், சிறந்த கேரக்டர்களும், தொடர்ந்து பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான சூழ்நிலைகளும் அமைய வேண்டும். இல்லையென்றால் எவ்வளவு சிறந்த நடிகையாக இருந்தாலும், அழகாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகியே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

சதா

தமிழ் சினிமாவில், ஜெயம் ரவி நாயகனாக அறிமுகமான ஜெயம் படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சதா. இவரது முழு பெயர் சதாஃவ் முஹமது சையது. இவரது தாய்மொழி மராத்தி. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில், சியான் விக்ரம் ஜோடியாக சதா நடித்த அந்நியன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.

ஜெயம் படத்தை தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, டார்ச் லைட், எலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சதா.

--Advertisement--

விக்ரம், மாதவன், அஜித், ஜெயம் ரவி போன்ற பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த சதா, ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்த போது காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக எலி படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டார்ச்லைட் படத்தில் விலைமாது

அதுமட்டுமின்றி டார்ச் லைட் என்ற படத்தில் விலைமாது கேரக்டரில் சதா நடித்திருந்தார். ஏனெனில் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால், ஒரு கட்டத்துக்கு பிறகு எப்படியாவது சினிமாவில் நடிப்பை தொடர வேண்டும் என்பதற்காக, கிடைத்த மோசமான கேரக்டரிலும் நடித்ததாக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

அதுபோன்ற மோசமான படங்களில் நடித்த பிறகு, தமிழில் மீண்டும் நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பு சதாவுக்கு கிடைக்கவே இல்லை. நடிகை சதா தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கு மும்பையில் சொந்தமாக ஹோட்டல் பிசினஸ் உள்ளது. டிவி சேனல்களில் அவ்வப்போது ரியாலிட்டி ஷோ நடுவராக கலந்துக்கொள்கிறார்.

ஹோம்லி லுக்

சதாவை பொருத்தவரை மிக அழகான நடிகை. குறிப்பாக ஜெயம் ரவி படத்தில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்டார். அந்நியன் படத்தில் இவரது ஹோம்லியான தோற்றம் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது.

ஆனால் அந்நியன் படத்திலேயே அதற்கு நேர்மாறாக மாடர்ன் ட்ரஸ்ஸில் இவர் பாடல் காட்சிகளில் நடித்திருந்தார். அதிலும் அய்யராத்து பெண்ணாக நந்தினி என்ற கேரக்டரில் நடித்த சதா, அடுத்தடுத்த படங்களில் பெரிய ஹீரோயின் ஆக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், திருப்பதி படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாகவும் நடித்தார்.

அதன் பிறகு இவர் பெரிய அளவில் நடிப்பில் சோபிக்கவில்லை. அதன் பிறகு படிப்படியாக அவரது மார்க்கெட் குறைந்த நிலையில், டார்ச் லைட் என்ற படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்து தனது மொத்த கேரியரையும் சினிமா வாய்ப்புகளையும் அவரே இழந்துவிட்டார்.

இன்னும் திருமணமில்லை

இப்போது சமூக வலைதளங்களில், ஆக்டிவாக இருக்கும் சதா தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதை பார்த்து பிறகாவது, சினிமாவில் வாய்ப்புகள் தொடருமா என்று எதிர்பார்க்கும் நிலையில், அவர் வயது 40 கடந்து விட்டதால், அவருக்கு படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதில்லை. அதே நேரத்தில் 40 வயது கடந்தும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

எனினும் தனது ஆத்ம திருப்திக்காகவும், ரசிகர்களின் சந்தோஷத்துக்காகவும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அடிக்கடி வரம்பு மீறிய மிக கவர்ச்சியான உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஆனால் நடிகை சதா, ஒரு நல்ல நடிகையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட போதும், தொடர்ந்து கவர்ச்சியின் பக்கம் போகாமல் அவர் குடும்பப்பாங்கான கேரக்டரிலே தேர்ந்தெடுத்து நடித்திருந்தால், இப்போதும் அவர் ஒரு நல்ல நடிகையாக தமிழ் சினிமாவில் நீடித்திருக்க முடியும்.

சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியை நாடும் போது ஒரு கட்டத்துக்கு பிறகு அவர் பட வாய்ப்புகளை மொத்தமாக இழக்கும் ஒரு சூழல் ஏற்பட்டு விடுகிறது. அதற்கு உதாரணமாகிவிட்டார் நடிகை சதா.

ஒரு பக்கம் முழுசா தெரியுதே

இப்போது லேட்டஸ்டாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் இப்படி கூட கவர்ச்சி காட்ட முடியுமா என்று சொல்லும் அளவுக்கு மொத்தமாக தனது அழகை எக்கச்சக்கமான காட்டி, ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

இப்படி ஒரு பக்கம் முழுசா தெரியுதே என்று ரசிகர்கள் வாய்பிளந்து போயுள்ளனர். இணையத்தை மிரள வைத்த நடிகை சதாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top