63 வயசு கிழவனுடன் 26 வயசு மனைவி கட்டிலில் உல்லாசம்.. நேரில் பார்த்த கணவனை வலியே இல்லாமல் நூதன முறையில் தீர்த்து கட்டிய கொடூரம்..
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து சைனைடு கலந்த மது கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மனைவி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். விழுப்புரம் அருகே உள்ள வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மணிகண்டன் (32) கடந்த 14-ம் தேதி இந்திராநகர் புறவழிச் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது மனைவி தமிழரசி (25), கள்ளக்காதலன் சங்கர் (52), மற்றும் அவர்களது உறவினர்களான சீனிவாசன், ஸ்வேதா ஆகியோர் இந்த கொலைக்கு திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு எதிராக விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நால்வரும் கைது செய்யப்பட்டனர். ஸ்வேதாவின் கணவர் கார்த்திக் ராஜா தலைமறைவாகியுள்ளார். கொலையின் பின்னணி: மணிகண்டனும் தமிழரசியும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கட்டிட வேலை செய்தபோது, மேஸ்திரியான சங்கருடன் தமிழரசிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மணிகண்டன், மனைவியை சொந்த ஊருக்கு...