காதல் பட சிறுவனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா..?

நடிகர் பரத், சந்தியா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி சக்கபோடு போட்ட திரைப்படம் தான் காதல் . இந்த திரைப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார்.

இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தது. வித்தியாசமான காதல் கதை, பள்ளிப்பருவ பெண் ஒருவர் மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் இளைஞனை காதலிப்பார்.

காதல் திரைப்படம்:

ஆனால் அவர்களின் காதலை பெற்றோர்கள் எதிர்ப்பது பின்னர் எப்படி இந்த காதல் நிறைவேறுகிறது என்பது பற்றிய கதை தான் காதல் திரைப்படம்.

பல திடீர் திருப்பங்களுடன் சுவாரசியங்களுடன் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் எடுத்திருந்தன இந்த படம் அப்போதே மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை பெற்றது.

---- Advertisement ----

மேலும், கடந்த மேலும் 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என்ற ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்று சிறப்பிக்கப்பட்டது.

உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காதல் திரைப்படத்தில் மெக்கானிக் செட் வைத்து சொந்தமாக வேலை செய்து வந்தவர் நடிகர் பரத்.

காதல் பட கரட்டாண்டி:

அதில் பரத்துடன் மெக்கானிக் செட்டில் கரட்டாண்டி என்ற கேரக்டரில் நடித்த சிறுவன் தான் அருண். இவர் அந்த திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அந்த திரைப்படம் இவருக்கு வாழ்க்கை முழுக்க ஒரு நல்ல அடையாளத்தை கொடுக்கும்படியாக மிகச் சிறந்த குழந்தை நட்சத்திரமாக அந்த திரைப்படத்தில் நடித்திருப்பார் .

அப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த சிவகாசி திரைப்படத்திலும் நடித்தார். இருந்தாலும் அவருக்கு காதல் திரைப்படம் போன்று மிகப்பெரிய அளவில் எந்த படமும் பெயரும் புகழும் கொடுக்கவில்லை.

தொடர்ந்து அவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் வளர வளர அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதனிடையே இரண்டு ஆண்டுகளாக தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் இரு வீட்டார் சம்மதப்படி அந்த பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்தி மற்றும் புகைப்படங்கள் வெளியாக்கியது.

மேலும் அவருடன் நடித்த நடிகர்கள் பல பேர் அவரின் திருமணத்திற்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

காதல் பட சிறுவனின் தற்போதைய நிலை:

இந்நிலையில் காதல் பட கரட்டாண்டி தற்போது பர்னிச்சர், கட்டில், பீரோ போன்ற மர வேலைகள் செய்யும் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.

இது குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அருண்குமார். நான் மதுரை சேர்ந்தவன் ம் வகுப்பு படிக்கும் போதே எனக்கு காதல் படத்தில் வாய்ப்பு வந்தது .

அதன் மூலம் நான் சிறுவயதிலிருந்து நாடகங்களில் நடிப்பேன். அதனால் தான் என்னைப் பற்றி யாரோ பட குழுவுக்கு சொல்லி அதன் மூலம் தான் எனக்கு காதல் பட வாய்ப்பு கிடைத்தது.

காதல் பட வாய்ப்பு எனக்கு பள்ளியில் வந்து தான். அங்கு விசாரித்து என்னை கூட்டி சென்றார்கள். இந்த படம் எனக்கு மிகப்பெரிய அளவில் அடையாளத்தை கொடுத்தது.

அதை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்தாலும் தொடர்ந்து நடித்து வந்த நான்
திரைப்படங்களில் நடிக்காமல் போனதற்கு முழுக்க காரணமே இயக்குனர்களின் காண்டாக்ட் எல்லாம் என்னிடம் இருந்தது தொலைந்து போனது.

அதனால் தொடர்பு கொண்டு வாய்ப்பு தேட முடியவில்லை. பின்னர் படிப்படியாக எனக்கு வாய்ப்புகள் கூறிய துவங்கி விட்டது .

அதுமட்டுமில்லாமல் வீட்டின் பிரச்சனையும் சில பல சூழ்நிலையும் என்னால் வாய்ப்பு தேட முடியாமல் போய்விட்டதாக அருண் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

பரிதாப நிலை

நான் காதல் திரைப்படத்தில் மெக்கானிக் ஷெட்டில் எப்படி வேலை பார்த்து வந்தேனோ அதேபோல் தான் இந்த மர ஷெட்டில் வேலை பார்க்கும் போதும் வேலை செய்பவர்களுக்கு பொருட்களை எடுத்துக் கொடுப்பது ஆணியடிப்பது என சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.

தினக்கூலியாக தான் அங்கு வேலை செய்து வந்தேன். அதன் பிறகு வேலையை நன்றாக கற்றுக்கொண்டு ஆர்டர் எடுத்து வேலை செய்து வருகிறேன்.

இருந்தாலும் எனக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கிறது. இந்த பேட்டியின் மூலம் ஆவது எனக்கு வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன் என அருண் அந்த பேட்டில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----