Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

பெத்த அப்பன் பேசுற பேச்சா இது..? இதுக்கு OK’ன்னா.. மகளுடன் அதற்கு போகலாம்.. ஷாருக்கான் போட்ட 7 ரூல்ஸ்..!

உலகப் புகழ் பெற்ற திரைப்பட நடிகரான ஷாருக்கான் பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் ஹாலிவுட் ஹீரோக்களுக்கும் டக் கொடுக்கும் வகையில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகர் ஷாருக் கான்:

குறிப்பாக பாலிவுட்டில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையுமே தன்வசப்படுத்தி இருக்கும் ஷாருக்கானுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்தை கொடுத்திருக்கிறார்.

---- Advertisement ----

கிட்டத்தட்ட அவருக்கு 58 ஆகியும் இன்னும் அவரது மார்க்கெட்டும் கொஞ்சமும் குறையவே இல்லை.

இதுதான் ஷாருக்கானின் தனித்துவமே என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் இளமையான தோற்றத்தில் இன்னும் அப்படியே இருந்து வரும் சாருக் கான் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்த வருகிறார் .

இவர் நடிகர் தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் இப்படி பல பன்முக திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.

ஜவான் வெற்றி:

கடைசியாக ஷாருக்கான் பிரபல தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாராவுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தை தமிழ் சினிமாவில் வளரும் இளம் இயக்குனரான அட்லீ இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் வெற்றி படமாக அமைந்ததோடு ஷாருக்கானின் மார்க்கெட்மீண்டும் மிக உச்சத்தில் உயர்த்தி கொண்டு போய் உட்கார வைத்துள்ளது.

அடுத்ததாக அவர் தற்போது கிங் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான. ரெட் சில்லி என்டரைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஷாருக்கானின் மகளான சஹானா கான் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.

மகள் சினிமாவில் அறிமுகம்:

டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஷாருக்கானின் மகளான சுகானா தான் கவர்ச்சியான உடைகளையும் மாடர்ன் உடைகளையும் அணிந்து கொண்டு எடுத்துக் கொள்ளும் விதவிதமான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் பார்வை ஈர்த்து வருவார்.

இதனால் சஹானா எப்போது திரைப்படங்களில் நடிக்க வருவார்?| என ரசிகர்கள் ஷாருக்கான் இடமே கேட்டு வரத் துவங்கினர்.

இப்படியான சமயத்தில் சஹானா கானை கிங் படத்தில் பார்க்க ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

இதனிடையே நடிகர் ஷாருக்கான் தனது மகளை காதலிக்கும் நபருக்கு கிட்டத்தட்ட ஏழு விதமான கண்டிஷன்களை போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது.,

ஷாருக்கானின் 7 கண்டீஷன்ஸ்

1, வேலை இருக்கணும்.

2.உன்னை எனக்கு பிடிக்காது என்பதை புரிந்துகொள்.

3.நான் எல்லா இடத்திலும் இருப்பேன்.

4. ஒரு வக்கீல் வைத்துக் கொள்.

5. சுஹானா என் ப்ரின்சஸ்.

6. நான் ஜெயிலுக்கு திரும்பிச் செல்ல தயங்க மாட்டேன்.

7. நீ சுஹானாவுக்கு என்ன செய்தாலும் அதை நான் உனக்கு செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதை அறிந்த ரசிகர்கள், உலகத்தில் இப்படியும் ஒரு அப்பாவா? என கேட்கும் வகையில் அவர் கொடுத்திருக்கும் கண்டிஷன் தற்போது இணையத்தில் வைரலாகி பேசு பொருளாக உள்ளது.

சுஹானா ஹான் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தாவை காதலிப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top