Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அந்த நேரத்தில் ரத்தம் வந்தா.. இன்னும் வேகமாசெய்வான்.. கணவர் குறித்து சீரியல் நடிகை ஷாலினி பகீர்.!

மனைவியை தனக்கு வாய்க்கும் வாழ்க்கை துணையை இன்னொரு தாயாக, நெருங்கிய சினேகிதியாக, நல்ல வழித்துணையாக, கருதி கொண்டாடும் கணவர்கள் வாழ்கிற இதே பூமியில், மனைவியாக கிடைக்கும் பெண்களை மனதளவில், உடலளவில் துன்புறுத்தியே சுகம் காணும் சைக்கோ கணவன்களும் இருக்கவே செய்கின்றனர்.

அதுவும் குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவன்களால், அப்பாவி மனைவிகள் அடையும் துன்பங்களும் துயரங்களும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.

முள்ளும் மலரும் – சீரியல் ஷாலினி

நடிகை ஷாலினி சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பரிச்சயமானவர். முள்ளும் மலரும் சீரியல் மூலம் பிரபலமானவர். சூப்பர் மாம் போன்ற சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் பங்கேற்றுள்ளார். துணிச்சல் மிக்க பெண்ணாக அதில் இவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர்.

சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது, என்னுடைய முதல் திருமண வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை. திருமணமான சில மாதங்களிலேயே என் கணவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருமே பிரிந்து விட்டோம். அதன்பிறகு பெற்றோருடன் இருந்தபோது எனக்கு ரியாஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு, அவரை நான் திருமணம் செய்து கொண்டேன்.

---- Advertisement ----

அடிக்கடி அடித்தார்

ஆரம்பத்தில் என் மீது அன்பாக இருந்த அவர், சிறிது நாட்களுக்குப் பிறகு என் மீது அடிக்கடி கோபப்பட ஆரம்பித்தார். கோபம் அதிகமாகும் போது என்னை அடிக்கவும் செய்தார். முதல் திருமண வாழ்க்கை சரியில்லாததால் இந்த வாழ்க்கையையும் இழந்து விடக்கூடாது என்று அனைத்தையும் நான் அமைதியாக பொறுத்துக் கொண்டேன்.

பிரண்ட்ஸ் இல்லை

குழந்தை பிறந்தால் அவர் சரியாகிவிடுவார், வாழ்க்கையில் இத்தனை துன்பங்கள் இருக்காது என்று நினைத்து குழந்தைக்காக மருத்துவ சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்திலும் என்கூட வந்து சரக்கு அடி, உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதால் எனக்கு யாருமே பிரண்ட்ஸ் இல்லை என்று சொல்லி அவர், என்னை மதுபானம் குடிக்க சொல்லி டார்ச்சர் செய்வார்.

ஒருநாள் நான் சரக்கு அடிச்சிட்டு தூங்கிட்டேன். அப்போது என் மேல் தண்ணியை ஊத்தி எழுப்பி, நீ மட்டும் நல்லா தூங்குறியானு கேட்டு கேட்டு என்னை அடித்தார். அவர் அடித்த அடியில், என் தலையிலிருந்து ரத்தம் வந்துவிட்டது.

ரத்தம் வந்தாலும் அடிதான்

ரத்தம் வந்தாலும் விடாமல் ரத்தம் வர்ற அளவுக்கு என்னை அடிக்க வைச்சுட்டியே என்று சொல்லி விட்டு மீண்டும் மீண்டும் என்னை பயங்கரமாக அடித்தார்.

அவரைப் பார்த்தால் யாருமே அப்படிப்பட்ட மோசமான ஆளா என்று நம்ப மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு நல்லவன் மாதிரி இருப்பார். தினம் அடி வாங்கி நான் கஷ்டப்பட்டேன். அதனால்தான் விவாகரத்தை போட்டோ ஷூட் நடத்திக் கொண்டாடினேன்.

எனது செயலை விமர்சித்தாலும்…

எனது செயலை சிலர் விமர்சித்தாலும், சிலர் நான் எதிர்கொண்ட போராட்டங்களையும், சவால்களையும் முழுமையாக புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும், என்று அந்த பேட்டியில் ஷாலினி ஓப்பனாக கூறியிருந்தார்.

குடிபோதையில் இருக்கும் நேரத்தில் ரத்தம் வந்தால், இன்னும் வேகமா என்னை அடிப்பார் என்று தனது 2வது கணவர் குறித்து சீரியல் நடிகை ஷாலினி கூறிய பகீர் தகவல்களை கேட்டு ரசிகர்கள் அதிர்ந்து போய்விட்டனர்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top