Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

என்னோட பீரியட்ஸ் நேரத்தில் என் குடும்பத்தினரே.. சந்திரலேகா சீரியல் நடிகை உடைத்த உண்மை..!

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா தொடரில் நடித்த நடிகை ஸ்வேதா பாண்டேகர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் இந்த சீரியலில் வெகுவாக ரசிகர்களின் மனதை எளிதில் கவர்ந்தார்.

சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்திய இவர் சென்னையில் உள்ள பிஎம்ஆர் கல்லூரியில் பிடெக் படித்ததை அடுத்து எம்பிஏ-வும் படித்திருக்கிறார்.

சந்திரலேகா சீரியல் நடிகை..

தமிழ் திரையுலகை பொருத்த வரை 2007 – ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளி வந்த ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருக்கிறார். 

இதனை அடுத்து 2008-இல் வள்ளுவன் வாசுகி படத்தில் நடித்த இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

---- Advertisement ----

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த பூவா தலையா, பயணங்கள் தொடரும், மீராவுடன் கிருஷ்ணன், வீரசோழன், இதயம் திரையரங்கம், நான் தான் பாலா, பூலோகம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் இன்றும் பெயர் சொல்ல கூடிய அளவு இவரது பெயரை சொல்லி வருகிறது.

சின்னத்திரை சீரியலை பொருத்த வரை சந்திரலேகா மட்டுமல்லாமல் லக்ஷ்மி வந்தாச்சு என்ற தொடரில் ஜீ தமிழில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து ஸ்டார் வார்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடியவர்.

நிலா, ரோஜா, மகராசி, அன்பே வா போன்ற சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல பெயரையும் ரிச்சையும் கொடுத்தது சந்திரலேகா சீரியல் தான். கடந்த 9 ஆண்டுகளாக இந்த தொடர் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்று டிஆர்பி ரேட்டையும் தக்க வைத்த தொடர் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

பீரியட்ஸ் நேரத்தில் இப்படித்தான்..

எத்தகைய கேரக்டர்கள் கொடுக்கப்பட்டாலும் அதை பக்குவமாக செய்து முடிக்க கூடிய திறமை இவரிடம் இருப்பதால் அடுத்தடுத்து சீரியல் களில் அதிகளவு நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் இவர் அண்மையில் வீடியோ ஒன்றில் பெண்களுக்கு நடக்கும் சில விஷயங்களை ஓபன் ஆக பகிர்ந்திருக்கிறார்.

அதில் குறிப்பாக இயற்கையாக நிகழும் மாதவிடாய் சமயத்தில் பொதுவாகவே பெண்களை வீட்டில் இருந்து ஒதுக்கி வைப்பார்கள்.

அந்த மூன்று நாட்களும் உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் பல பெண்கள் என்றும் சங்கடங்களை அனுபவித்து வருகின்ற வேளையில் மீடியாவில் புகழ் பெற்ற இவருக்கும் பீரியட்ஸ் நேரத்தில் அது போன்ற கஷ்டங்களை இவரது குடும்பத்தாரே கொடுத்திருப்பதாக உடைத்த உண்மை தற்போது வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து அப்படி என்ன தான் அந்த சமயத்தில் அவர் குடும்பத்தார் செய்தார்கள் என்று பலரும் பல விதமான பேச்சுகளை பேசி வரும் வேளையில் ஒரு சாமானிய பெண்ணுக்கு நடக்கும் அதே அநீதி தான் ஸ்வேதாவிற்கும் நடந்துள்ளது.

குடும்பத்தார் ரகசியத்தை உடைத்த ஸ்வேதா பண்டேகர்..

அந்த வகையில் சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர் தன்னுடைய பீரியட்ஸ் நேரத்தில் குடும்பத்தார் என்னை தீண்டாமல் ஒதுங்கி ஒதுங்கி செல்வார்கள் என்று சொன்னதோடு நிற்காமல் அதை விவரமாக விவரிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் உண்மையிலேயே எவ்வளவு தான் படித்து இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் இருந்தாலும் இன்னும் பீரியட்ஸ் காலகட்டத்தில் பெண்களை அந்த மூன்று நாட்கள் வீட்டை விட்டு ஒதுக்கி வைப்பதும் அவர்களோடு புழங்காமல் இருப்பதும் எல்லா பக்கமும் நடந்து வருகிறது.

இந்த விஷயத்தை ஒளிவு மறைவு இல்லாமல் சந்திரலேகா சீரியலில் நடித்த நடிகை ஸ்வேதா பண்டேகர் தற்போது தன்னுடைய பீரியட்ஸ் நேரத்தில் தன் குடும்பத்தார் தன்னை ஒதுக்கி வைத்து தீண்டாமல் இருக்கும் விஷயத்தை பகிர்ந்தது ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டதோடு இப்படி செய்வது சரியா? சரி இல்லையா? என்ற ரீதியில் அவர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இந்த வீடியோவை நீங்கள் காண விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதும்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top