நடிகை சிம்ரன் குடும்ப கதை.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..?

மும்பை மகாராஷ்டிராவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை சிம்ரன் முதன் முதலில். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

இவர் நடிகையாவதற்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆம், தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

அதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்து 1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது.

சிம்ரன் நடிகையான கதை:

அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டில் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த “தேரே மேரே சப்னே” திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

---- Advertisement ----

தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வந்த அவர் 90ஸ் மட்டும் 20 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக நடிப்பு நடனம் எல்லாவற்றிலும் பின்னி பெடல் எடுத்த சிம்ரன் நேருக்கு நேர் நட்புக்காக துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினால், வாலி, ஜோடி, பிரியமானவளே உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தார்.

மேலும் பார்த்தேன் ரசித்தேன், பஞ்சதந்திரம், ரமணா, நியூ ,வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

வெற்றி திரைப்படங்கள்:

கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கியும் சிம்ரன் இன்னும் தனது மவுஸ் குறையாமல் மார்க்கெட் குறையாமல் தனது தனக்கான ரசிகர்களை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு காரணம் அவரது நடனமும் அவரது நடிப்பும் தான். இந்த நிலையில் நடிகை சிம்ரனின் குடும்பம் கதை பற்றி பார்க்கலாம்.

பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்டவர்களான சிம்ரனின் குடும்பத்தார். தந்தை பெயர் அசோக் நாவல், தாயார் பெயர் சாருதா நாவல்.

சிறு வயதிலேயே பள்ளியில் படிக்கும் போதே நாடகம் நடிப்பது, நடனம் ஆடுவது உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தவராக இருந்தார் சிம்ரன்.

தங்கையின் தற்கொலை:

சிம்ரனின் தங்கையான மோனால் பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வலம் வந்தார். 2002 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காரணம் காதல் தோல்வி என கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து சிம்ரன் நடன இயக்குனர் ஒருவர் தனது தங்கையை காதலித்து ஏமாற்றி விட்டதால் மனம் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக சிம்ரன் கூறினார்.

மேலும் சிம்ரனுக்கு ஜோதி என்ற இன்னொரு தங்கையும் இருக்கிறார். அவரும் சினிமாவில் நடிகையாக இருந்தவர் தான்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிம்ரனின் குடும்ப கதை:

சிம்ரன் தீபக் பாக்கா என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார் .இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

திருமணம் செய்து கொண்ட பிறகு திரைப்படங்களில் சிம்ரன் நடிப்பதில் சற்று ஒதுங்கியே இருந்த சிம்ரன் 9ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்தார்.

தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்த சிம்ரன் இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இதனிடையே குடும்பம், குழந்தை என பிசியாகி விட்டார். அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

---- Advertisement ----