Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

இணையத்தில் பிட்டு படங்கள் கிடைப்பதால்.. இங்கு இது நடந்துச்சு.. சுசித்ரா பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக பார்க்கப்பட்டு வந்த சுசித்ரா ரேடியோ ஜாக்கியாக தனது பணியை செய்து வந்தார்.

அதன் பின்னர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த லேசா லேசா படம் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி ஒரு நல்ல அறிமுகத்தை கோலிவுட் சினிமாவில் பதித்தார்.

ஆர்ஜே முதல் நடிகை வரை:

அதையடுத்து அவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் தொடர்ந்து அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது.

மன்மதன், காக்க காக்க, ஜே ஜே , வல்லவன், போக்கிரி , பொல்லாதவன் இப்படி பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இவர் பாடல் பாடியிருக்கிறார்.

--Advertisement--

அந்த அளவுக்கு பிரபல பாடகியாக இருந்து பின்னாளில் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். குறிப்பாக இவர் பாடிய அத்தனை பாடல்களும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அதற்கு முக்கிய காரணமாக இருந்ததே சுசித்ராவின் காந்த குரல் தான். இவர் பாடகியாக மட்டும் அல்லாமல் டப்பிங் கலைஞராகவும் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றார்.

டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக திருட்டுப் பயலே படத்தில் மாளவிகாவுக்கும், கந்தசாமி படத்தில் ஸ்ரேயா சரண் மற்றும் மங்காத்தா திரைப்படத்தில் லட்சுமி ராய் போன்றவர்களுக்கு குரல் கொடுத்தவர் சுசித்ரா.

ஸ்டைலிசான பேச்சும் அதில் கொஞ்சம் ஆங்கிலம் கலந்தும் பேசும் சுசித்ராவின் குரலுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

இப்படி சினிமா திரைத்துறையில் ஆர் ஜே வாகவும் பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பன்முகத் திறமை கொண்டு சிறந்து விளங்கி வந்தார் பாடகி சுசித்ரா.

பன்முக திறமைகொண்ட பாடகி சுசித்ரா:

ஆயுத எழுத்து, பலே பாண்டியா உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் மிகப்பெரிய புயலை கிளப்பினார் சுசித்ரா.

அதிலும் அவரது அக்கவுண்டில் இருந்து தனுஷ், அனிருத் , ஆண்ட்ரியா, திரிஷா, ஹன்சிகா, நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்க அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் அப்போது பெரும் பூதாகரத்தை கிளப்பியது. இந்த பிரச்சனை ஆய்ந்து ஓய்ந்த பின்னர் சுசித்ராவும் லண்டனில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

பின்னர் மீண்டும் கடந்த 2020 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களுக்கு அறிமுகமானார்.

இந்நிலையின் தற்போது சமீப நாட்களாக சுசித்ரா சமூக வலைதளங்களில் பேசி வரும் விஷயம் பெரும் பூதாகரத்தை கிளப்பி இருக்கிறது.

மீண்டும் சுச்சி லீக்ஸ் தூசி தட்டிய சுசித்ரா:

மீண்டும் சுச்சி லீக்ஸ் விவகாரம் தூசி தட்டி எழுப்பப்பட்டுள்ளது. இதுவரை வெளிவராத ரகசிய விஷயங்களை கூறி அம்பலம் ஆக்கி வருவதால் ஒட்டுமொத்த திரைத்துறை சேர்ந்த நட்சத்திரங்களுக்கும் பீதியை கிளப்பி இருக்கிறார் சுசித்ரா.

அந்த வகையில் தற்போது இணையதளங்களில் பிட்டு படங்கள் வெளியாவது குறித்தும் இது எப்போது ஆரம்பித்தது எப்படி ஆரம்பித்தது என்பது பற்றி கூறி குண்டு தூக்கி போட்டுள்ளார் சுசித்ரா.

அவர் கூறியதாவது, ஒரு காலத்தில் தமிழ் சினிமாவிலேயே அப்படியான படங்கள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தன.

அப்பொழுது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் மேலும் நடிகர்கள் சரத்குமார் ராதாரவி போன்ற பெரிய நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்படியான படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாக கூடாது.

அது தமிழ் சினிமாவை அழித்துவிடும் என கருதி எங்கெங்கெல்லாம் அப்படியான படப்பிடிப்புகள் நடந்ததோ அங்கெல்லாம் சென்று பிரச்சனை செய்து படப்பிடிப்பை நிறுத்தி இருக்கிறார்கள்.

இணையத்தில் பிட்டு படங்கள்:

எந்த ஒரு ஹோட்டல் அல்லது ஸ்டுடியோவிலும் இப்படியான படங்களை எடுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை.

ஆனால், ஒரு கட்டத்தில் அதையும் தாண்டி இப்படியான படங்கள் படப்பிடிப்பு நடக்கத்தான் செய்தது.

ஆனால், இணைய பக்கங்களில் எப்பொழுது இந்த படங்கள் வெளியாக ஆரம்பித்ததோ அப்போதே இப்படியான படப்பிடிப்புகள் சினிமாவில் நடப்பது குறைந்து விட்டது.

இணையத்தில் இப்படியான படங்கள் கிடைப்பது தான் இன்று தென்னிந்திய சினிமாவில் இப்படியான படங்கள் உருவாகாமல் இருக்க முக்கியமான காரணம் என பதிவு செய்திருக்கிறார் பாடகி சுசித்ரா.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top