Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

வாய்ப்புக்காக அதை பண்ணேன்.. லிங்கா பட நடிகை பேட்டி!

நடிகர், நடிகைகளின் திரைப்பட வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமல்ல அவர்கள் பார்ப்பதற்கு தான் நட்சத்திர பிரபலங்களாக மக்களுக்கு பொதுவெளியில் தென்பட்டு வருகிறார்கள்.

ஆனால் அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருக்கிறது. அந்த இடத்தை பெ ற அவர் எவ்வளவு சிரமத்தை தாண்டி வந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பது அவர்களிடம் கேட்டால் மட்டுமே அதற்கான உண்மை என்ன என்பது வெளியில் வரும்.

நடிகை சோனாக்ஷி சின்ஹா:

அப்படித்தான் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆரம்ப கால திரைப்பட வாழ்க்கை பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகையாக இருந்து வருகிறார்.ஹிந்தியில் பல்வேறு வெற்றி படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

--Advertisement--

திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமாகவதற்கு முன்னர் முதலில் பேஷன் டிசைனர் ஆக இருந்து வந்தவர் சோனாக்ஷி சின்ஹா.

அதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க முதன் முதலில் தபாங் திரைப்படத்தில் 2010 ஆம் ஆண்டில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்ததால் முதல் படத்திலே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஆரம்ப நாட்கள்:

அது மட்டும் இல்லாமல் பிலிம் ஃபேர் உள்ளிட்ட விருதுகளை பெற்றார். பாட்னாவில் பிறந்து வளர்ந்தவரான சோனாக்ஷியின் பெற்றோர்கள் திரைப்பட துறையை சார்ந்தவர்கள் என்பதால் இவருக்கு மிக சுலபமாக வாய்ப்புகள் என்பது கிடைத்துவிட்டது.

தபாங் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் அதன் பின்னர் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி தேடி அமையவில்லை.

இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளை கைவிடாமல் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.2012 ஆம் ஆண்டில் வெளிவந்த பிரபுதேவாவின் இயக்கத்தில் ரவுடி ரகத்தேர் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

இந்த படம் திரைப்படம் வெளியான ஆண்டு கிட்டத்தட்டரூ .15 கோடிக்கு மேல் கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.

இதன் மூலம் சோனாக்ஷி சின்ஹாவுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியது. நடிப்பதிலும் நடனத்திலும் பின்னி பெடலெடுக்கும் சோனாக்ஷிக்கு மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கூட்டம் அதிகரித்தது.

ரஜினிகாந்திற்கு ஜோடியான சோனாக்ஷி:

இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இப்படியான நேரத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள “ஹீரமண்டி: தி டயமண்ட் பஜார்” என்ற வெப் தொடரில் சோனாக்ஷி சின்ஹா சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த தொடர் மே 1ம்தேதி நெட்பிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் இதற்கான ப்ரொமோஷன்ககளில் தீவிரம் காட்டி வரும் சோனாக்ஷி பல்வேறு சேனல்கள் மற்றும் youtube களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்த வண்ணம் இருந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டு இருக்கிறார் .

அப்போது என்னுடைய திரைப்பட வாழ்க்கையில் ஆரம்ப கட்ட காலத்தில் நான் பெரிய படங்களில் நடிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

பெரிய படவாய்ப்பிற்காக அதை செய்தேன்:

லோ பட்ஜெட் படங்களிலும் பெயர் தெரியாத இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் வளர்ந்து வரும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டவர்களில் பட வாய்ப்புகளை நான் தவறவிடாமல் நடித்து வந்தேன்.

அதனால்தான் இன்று இந்த அளவுக்கு இடத்தை பிடித்திருக்க முடிகிறது அது மட்டுமில்லாமல் பொதுவாக நடிகர் தங்களை பற்றி வரும் விமர்சனங்களும் கேலி கிண்டல்களை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதை பார்த்து பயப்படக்கூடாது. என்னுடைய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆகாத காலகட்டத்தில். சிறந்த தயாரிப்பாளர் இயக்குனர்களை தேடிக்கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில்தான் எனக்கு சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி நிறுத்தினார். அவருக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top