Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அப்போ இது என்ன..? கடுப்பில் அஜித் ரசிகர்கள்.. கொழுத்திப்போட்ட ஸ்ரீகாந்த்.. என்னயா இப்படி பன்றாங்க..!

சினிமா நடிகர்களுக்குள் மோதல் என்றால் அதுகுறித்து அறிவதற்கும், அதுகுறித்த தகவல்களை தெரிந்துக் கொள்வதற்கும் எப்போது மற்றவர்களுக்கு அலாதியான பிரியம்தான். பக்கத்து வீட்டில், எதிர்த்த வீட்டில் சண்டை நடந்தால் பார்க்கிற ஆர்வம்தான் இதன் வெளிப்பாடு.

அஜீத்குமார் – விஜய்

அப்படி அஜீத்குமார் – விஜய் இடையே இதுவரை எந்தவிதமான சண்டையும் வந்தது இல்லை. அஜீத்குமார் குறித்து விஜய் எந்த கருத்தும் பேசியதில்லை.அதே போல் விஜய் குறித்து அஜீத்குமாரும் எதுவும் இதுவரை பேசியதில்லை.

இருவருமே ஒருவரை ஒருவர் பொது இடங்களிலோ, மற்றவர்களிடமே குறிப்பிட்டுச் சொல்லும்போது நண்பர் விஜய் என்று அஜீத்குமார் சொல்வார். நண்பர் அஜீத்குமார் என விஜய் சொல்வார். இப்படித்தான் அவர்களது நட்பும், தொடர்பும் இருந்து வருகிறது.

ரசிகர்கள் சண்டை

ஆனால் அவர்கள் இருவரையும் வைத்து ரசிகர்கள் போட்டுக்கொள்ளும் சண்டைதான் பெரிய சச்சரவாக மாறி விடுகிறது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது அனல் பறக்கிறது. குறிப்பாக இருவரது படங்கள் ரிலீஸ் ஆகும்போதும் தல பெரிசா, தளபதி பெரிசா என்ற ஈகோ பிரச்னையில் ரசிகர்கள், ஒருவரை ஒருவர் கண்டபடி திட்டிக் கொள்கின்றனர்.

---- Advertisement ----

ஆனால் அஜீத்குமாரோ, விஜயோ இருவரும் இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல், கண்டுக்கொள்ளாமல் தங்களது அடுத்த படத்தில் கமிட் ஆகி நடிக்கப் போய் விடுகின்றனர்.

ஸ்ரீகாந்த்

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் எப்போதுமே பேசுவதில் ஒரு வரன்முறை இல்லாதவர். வரம்பு மீறி பேசி, தன்னை மிகப்பெரிய ஆள் போல அவரே காட்டிக் கொள்வார். தோனி, டெண்டுல்கர், விராத் ஹோலி போன்றவர்களை எல்லாம் ஒருமையில் அவன், இவன் என்று பேசி ரசிகர்களுக்கு பயங்கர எரிச்சலை கிளப்புபவர்.

ஆர்ஜே பாலாஜி

அதுபோல் ஆர்ஜே பாலாஜி, கமெண்ட்ரி செய்யும் போது எப்போதுமே சென்னை அணி தோற்குமா, இந்திய அணி தோற்குமா என்ற எதிர்பார்ப்பவர் போலவே பேசி ரசிகர்களின் கோபத்தை தூண்டுபவர். இக்கட்டான நேரத்தில், கடைசி 3, 4 பந்துகள் இருக்கும்போது விக்கெட் விழாதா எனக்கேட்டு அதிர்ச்சி தருவார்.

ஆக இரண்டு பேருமே வாயில் சனியுடன்தான் கிரவுண்டுக்கு வர்ணனை செய்ய வருவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கடுப்புக்கு ஆளானவர்கள்.

சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளர் ஸ்ரீகாந்த், ஆர் ஜே பாலாஜி இடையே நடந்த ஒரு உரையாடல் இணையத்தில் வைரலானது.

குற்றச்சாட்டு

பொதுவாக தமிழ் வர்ணனையாளர்கள் கிரிக்கெட்டை தாண்டி அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களை தான் 90 சதவீதம் பேசுகிறார்கள். கிரிக்கெட் குறித்த வர்ணனையும் கிரிக்கெட் குறித்த தகவல்களையோ கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஆரம்பம் முதலில் இருக்கிறது. இதனால் பலரும் கிரிக்கெட் வர்ணனையை ஆங்கிலத்தில் வைத்து கேட்கிறார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் ஆர் ஜே பாலாஜி இருவருக்கும் இடையே நடந்த உரையாடலானது அஜித் ரசிகர்களை கோபப்படுத்தும் விதமாக இருந்தது.

விவேகம் பார்த்ததில்லை

ஸ்ரீகாந்த் கூறுகையில், நான் விவேகம் படத்தை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை என்று கூறினார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் அஜித் நடித்த விவேகம் படத்தையாவது தெரிகிறது. ஆனால் விஜய் என்றால் யார் என்று கூட தெரியாது ஸ்ரீகாந்துக்கு என்று கலாய்த்து பதில் கொடுத்திருந்தனர்.

அப்போ இது என்ன

இதனை தொடர்ந்து அப்போ இது என்ன என்று நடிகர் விஜயுடன் ஸ்ரீகாந்த் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக விஜய் அஜித் படங்கள் வெளியாகும் போது தான் இரு தரப்பு ரசிகர்களிடையே பிரச்சனை வரும். தற்போது ஐபிஎல் போட்டியிலும் பிரச்சனை வந்திருக்கிறது என்று புலம்பி வருகிறார்கள் சக இணையவாசிகள்.

அப்போ இது என்ன..? கடுப்பில் அஜித் ரசிகர்கள்.. கொழுத்திப்போட்ட ஸ்ரீகாந்த்.. என்னயா இப்படி பன்றாங்க..!

இதையும் படியுங்கள்

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top