திருடு போன அந்த பொருள்.. கையும் களவுமாக சிக்கிய பணிப்பெண்.. குமுறு காஞ்சி காச்சிய போலீஸ்..!

சமீப காலமாக நடிகர், நடிகைகளின் விவாகரத்து செய்து பெரும் பரபரப்பாகவும் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த பிரபலங்களின் விவாகரத்து குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

அதேபோன்று நட்சத்திர நடிகர்களின் வீடுகளில் நகை திருடு கொள்ளை போவது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

நட்சத்திர வீடுகளில் தொடர் நகைத்திருட்டு:

இது தொடர்ச்சியாக நடந்தும் வருகிறது. அந்த வகையில் ஐஸ்வர்யா தனுஷ், ரஜினி வீடு மற்றும் விஜய் யேசுதாஸ் வீடு தொடர்ந்து எப்படி பல நட்சத்திர பிரபலங்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் வைர நகைகள் திருடு போவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகையான சாயா சிங்கின் வீட்டில் நகை திருடு போயிருப்பதாக அவர் அதிரடி புகார் ஒன்றை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

---- Advertisement ----

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை சாயாசிங் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் தமிழில் நடித்த திருடா திருடி படத்தின் மூலமாக அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நல்ல அழகு, பதுமையான தோற்றம் ,குடும்ப பங்கான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்துவது போன்று சாயா சிங் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அறிமுகப்படம்:

தமிழில் அறிமுகமாவதற்கு முன்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளிவந்த “முன்னாடி” என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் அறிமுகமானார்.

அதன் பிறகு தான் அவருக்கு பல மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. தனுசுடன் இவர் திருடா திருடி படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் சாயா சிங்கின் நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

அப்படத்தில் “மன்மதராசா” பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம் இன்று வரை ரசிகர்களால் மறக்கவே முடியாது .

அந்த அளவுக்கு அதிரடி நடனத்தை கொடுத்து எல்லோரையும் இயக்க வைத்தார். அதன் பிறகு விஜய்யுடன் “கும்பிட போன தெய்வம்” பாடல் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

இப்படி அதிரடியான பாடல்களுக்கு நடனமாடி விட்டு செல்லும் சாயா சிங்கிற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் போனது.

இதனால் திரைத்துறையை விட்டு சின்ன துறையில் நடிகையாக அறிமுகமானார் சாயாசிங். தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார்.

இந்த சீரியல்கள் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. முதன் முதலில் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட சின்னத்திரையில் பிஸியாக பயணித்து வந்தார் சாயாசிங்.

தற்போது 42 வயசாகும் சாயா சிங் கடந்த 2012 ஆம் ஆண்டு கிருஷ்ணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சாயா சிங் வீட்டில் நகை திருட்டு:

வாய்ப்பு கிடைக்காததால் குடும்பம், குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சாயா சிங்கின் வீட்டில் தற்போது நகைகள் திருட்டுப் போனதாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் .

அது பெரும் பரபரப்பான விஷயமாக தற்போது பேசப்பட்டு வருகிறது. பெங்களூரு பசவேஷ்வர்நகரில் உள்ள சாயா சிங்கின் தாயார் சாமனலதா வீட்டில் இருந்த 66 கிராம் தங்கம் மற்றும் 150 கிராம் வெள்ளி ஆபரணங்கள் திருடுபோய் உள்ளதாம்.

இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்ததையடுத்து விசாரணை நடத்தி திருடுபோன அத்தனை நகைகளையும் கைப்பற்றியதுடன் குற்றவாளியையும் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து சாயா சிங்கின் வீட்டில் வேலைபார்த்து வந்த பணிப்பெண் உஷா என்பவர் தான் நகைகளை திருடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

---- Advertisement ----