நடிகர் மகாநதி சங்கரின் மகள்கள் இவங்களா..? தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் ஹீரோவாக நடித்தால்தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை பெற முடியும். ஏனென்றால் ஹீரோவாக நடிப்பவர்கள் தான் நல்லவர்கள். வில்லனாக நடிப்பவர்கள் கெட்டவர்கள் என்று ஒரு காலகட்டத்தில் சினிமா ரசிகர்கள் அப்பாவித்தனமாக நினைத்தது உண்டு.

ஆனால் இப்போதுள்ள ரசிகர்கள், சினிமா குறித்த நல்ல புரிதலோடு இருப்பதால் நடிப்பு நன்றாக இருந்தால், வில்லன் நடிகராக இருந்தாலும் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். பெரிய ஹீரோவாக இருந்தாலும், நடிப்பில் சொதப்பினால், சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி விடுகின்றனர்.

மகாநதி சங்கர்

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வில்லன் நடிகர்கள் சிலர் உண்டு. அந்த வரிசையில் மகாநதி சங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு வில்லன் நடிகர்.

ஜெயில் வார்டன் துலுக்கானம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த மகாநதி என்ற படத்தில், ஜெயிலுக்குள் துலுக்கானம் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்திருப்பார். அதனால் இந்த படத்தில் அவர் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். அதனால் அவரது பெயரே மகாநதி சங்கர் என்று மாறி, அப்படியே இன்றுவரை அழைக்கப்படுகிறார்.

--Advertisement--

பாட்ஷா படத்தில்…

மகாநதி படத்தை தொடர்ந்து, பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் மகாநதி சங்கர். பாட்ஷா படத்தில் ரஜினியுடன் இருக்கும் நான்கு பேரில் ஒருவராக மகாநதி சங்கர் நடித்திருப்பார்.

அத்துடன் அமர்க்களம், கிரி, பாஞ்சாலங்குறிச்சி, தீனா, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி இப்படி பல படங்களில் மகாநதி சங்கர் நடிப்பு மிக மிக சிறப்பாக இருக்கும்.

காமெடி ரோல்களில்…

இவர் வில்லனாக மட்டுமல்ல, சில படங்களில் சின்ன சின்ன காமெடி ரோல்களில் நடித்திருக்கிறார். அதேபோல் குணச்சித்திர வேடத்திலும் மிகச் சிறப்பான நடிப்பை வழங்க கூடியவர் மகாநதி சங்கர்.

இவரது குரல்

இவரது குரல் வளம் மிக வித்தியாசமாக, மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் இவரது கரகரப்பான குரலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இவர் நடித்த பல படங்களில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிகாரி வேடத்தில் நடித்து இருப்பார் என்று குறிப்பிடத்தக்கது.

நாதஸ்வரம் நெல்லி ஆண்டவர்

சமீபகாலமாக மகாநதி சங்கருக்கு படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு இல்லாததால், டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் என்ற சீரியலில் நெல்லி ஆண்டவர் என்ற கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார். அத்துடன் மாயா, நந்தினி உள்ளிட்ட சில சீரியல்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.

இரண்டு மகள்கள்

மகாநதி சங்கருக்கு அன்பான மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என்று அழகான குடும்பம் உண்டு. சமீபத்தில் இணையத்தில் அவரது குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாழ்த்துகள் குவிகிறது

மகாநதி சங்கர் மகள்களா இவர்கள் என்று அந்த புகைப்படங்கள் இருக்கும் அவரது மகள்களை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இந்த அழகான குடும்பத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நிறைய வாழ்த்துகளும் ஏகப்பட்ட லைக்குகளும் குவிந்து வருகின்றன.