30 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணி ரத்னத்தின் முகத்திரையை கிழித்த நடிகை சுஹாசினி..!

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு சிறந்த நடிகையாக இருப்பவர் சுஹாசினி. இவர் நடிகர் சாருஹாசனின் மகள்.இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி. இவரது சித்தப்பா உலகநாயகன் கமல்ஹாசன்.

சுஹாசினி

சுஹாசினி நல்ல நடிகையாக, பல படங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். ஒரு சிறந்த நடிகையாக, தயாரிப்பாளராக, இயக்குனராக, டிவி தொகுப்பாளராக பல பரிமாணங்களை கொண்டிருக்கிறார்.

சிந்து பைரவி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை போன்ற படங்களில் அழுத்தமான கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் நெஞ்சில் பெரிய அளவில் இடம் பிடித்தவர்.

இவர் தனது தங்கை அனுதாசனை ஹீரோயினாக வைத்து டைரக்ட் செய்த படம் இந்திரா. இதில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்திருந்தார்.

---- Advertisement ----

மணிரத்னம் திருமணம்

கடந்த 1988 ஆம் ஆண்டில் இயக்குனர் மணிரத்னத்தை சுஹாசினி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார்.

கே பாலசந்தர் இயக்கிய சிந்து பைரவி படத்தில் நடித்ததற்காக, கடந்த 1986ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் சுஹாசினி என்பது குறிப்பிடத்தக்கது. ராவணன் படத்தில் கதை வசனகர்த்தாவாகவும் சுஹாசினி செயல்பட்டார்.

ஆகாய கங்கை, தாய் வீடு, சீடன், தர்மத்தின் தலைவன், சத்தம் போடாதே, வசீகரா, சிந்து பைரவி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வசீகரா, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், நெஞ்சத்தைக் கிள்ளாதே, பாலைவனச் சோலை, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

காதல் மெருகேறி…

நடிகை சுஹாசினி தனது கணவர் மணிரத்னம் வாழ்ந்து வரும் வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

நடிகை சுஹாசினி கூறியதாவது, மணிரத்னம் படங்களில் நாளுக்கு நாள் காதல் காட்சிகள் மெருகேறிக் கொண்டே இருக்க காரணம், அவரது நிஜ வாழ்க்கையில் ஆழமான அன்பும், காதலும் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பதுதான்.

நான் மணிரத்னம் மனைவியாக, சாருஹாசன் மகளாக, கமல்ஹாசனின் அண்ணன் மகளாக இருந்தாலும், என்னுடைய சுயத்தை நான் வெளிப்படுத்தும்போதுதான் அந்த இடத்தில் சுஹாசனியாக வெளிப்படுகிறேன்.

எல்லா இடத்திலும் என் கணவரும், என் சித்தப்பாவும், என் அப்பாவும் என்னை காப்பாற்றிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் பெருமைக்குரியவர்கள்தான், அன்புக்கு பாத்திரமானவர்கள்தான். ஆனால் அதே நேரத்தில் எனக்கான என் அடையாளங்களை நான் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை

எனக்கு பிடித்த பல விஷயங்களில் ஒன்றாக, மற்றவர்களை நடிக்க வைப்பது தான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. நான் ரஜினிகாந்துடன் தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை.

அதே வேளையில் சிரஞ்சீவி, மோகன்லால் போன்ற பிறமொழி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். என்னை பொருத்தவரை நடிப்பதோ, இயக்கமோ நான் மற்றவர்களை திருப்திபடுத்துவதற்காக அதை செய்வதில்லை. என்னுடைய சந்தோஷத்திற்காகவும், என்னுடைய விருப்பத்திற்காகவும் மட்டுமே.

நான் டைரக்ட் செய்வது, தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவது என் சந்தோஷம் சார்ந்த விஷயமாக மட்டுமே பார்க்கிறேன். எனக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே நான் அதைச் செய்கிறேன்.

என் கணவர்

என் கணவர் மணிரத்னம் மிகவும் அன்பானவர். அமைதியானவர் அற்புதமான மனிதர். அவரிடம் மிகச் சிறந்த பண்புகள் நிறைந்து இருக்கின்றன. அவருடன் வாழும் வாழ்க்கை எனக்கு இந்த மிகப்பெரிய நிம்மதியை, சந்தோஷத்தை தருகிறது என்று அந்த நேர்காணலில் நடிகை சுஹாசினி தன் கணவர் குறித்த விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

30 வருடங்களுக்கு பிறகு, இயக்குனர் மணிரத்னத்தின் குணங்களை பட்டியலிட்டு அவரது முகத்திரையை கிழித்திருக்கிறார், அவரது மனைவியான நடிகை சுஹாசினி.

---- Advertisement ----