“படுக்கையில் என் அருகில் அந்த உருவம் படுத்திருந்த போது…” – நடிகை சுஜிதா ஓப்பன் டாக்..!

கடந்த 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை சுஜிதா. தன்னுடைய 16 வது வயதில் அதாவது 1998 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 30-கும் அதிகமான சீரியல்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் என பல வகைகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் அம்மணி.

50க-கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் மலையாள பதிப்பின் நடிகை மாளவிகா மோகனன்-னுக்கு டப்பிங் கொடுத்திருந்தார் நடிகை சுஜிதா.

பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் சமீபத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது என்று கூறலாம்.

இந்த சீரியலில் நடித்த அனுபவம் குறித்து பேசிய சுஜிதா குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகளின் ஏக்கம், வலி என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாதது.

அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். நீண்ட நாட்களாக குழந்தைக்கு முயற்சி செய்தும்.. குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் ஒரு தம்பதிக்கு திடீரென ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும் பொழுது.. தனக்குள் ஒரு கரு உருவாகி அது குழந்தையாகி அந்த உருவம் தனக்கு அருகில் படுத்திருக்கும் பொழுது.. நான் நிஜமாகவே அழுதேன்.

அந்த காட்சியில் நான் கிளிசரின் போட்டுக் கொள்ளவில்லை. ஏனென்றால் குழந்தை இல்லாத தம்பதிகளின் வேதனை மிகப்பெரியது. அவர்களுடைய ஏக்கமும் வலியும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இப்படி இருக்கும் என்னுடைய தோழி ஒருவரிடம் இது குறித்து பேசிய போது அவருடைய வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை. தொண்டை அடைத்தது. அவருடைய குரல்கள் தழுதழுத்தன இவை எல்லாம் நான் நேரில் அனுபவித்து இருக்கிறேன் அவர்களுடைய வலியை தான் நான் என்னுடைய கதாபாத்திரத்தில் பிரதிபளித்திருக்கிறேன் என கூறியுள்ளார் சுஜிதா.