இதுவரை கட்சி ஆரம்பித்து நடுத்தெருவுக்கு வந்த 9 தமிழ் நடிகர்கள்..!

இதுவரை கட்சி ஆரம்பித்து நடுத்தெருவுக்கு வந்த 9 தமிழ் நடிகர்கள்..!

தமிழகத்தை பொறுத்த வரை திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் சிஎம் ஆவது அரசியலில் களம் காண்பது என்பது புதிது அல்ல. ஏற்கனவே திரைப்படங்களில் நடித்த எம் ஜி ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் முதல்வராக ஆட்சி செய்ததை அடுத்து பலரும் முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்காக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இதனை அடைத்து கட்சியினை ஆரம்பித்து அரசியலில் நகர்வுகளை நகர்த்தி வருவது வாடிக்கையான ஒன்றுதான்.

அந்த வகையில் அரசியல் கட்சியை ஆரம்பித்த பிரபல ஒன்பது தமிழ் நடிகர்கள் நடு தெருவுக்கு வந்த கதை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

கட்சி ஆரம்பித்த 9 பிரபல நடிகர்கள்..

மேலும் தமிழ் சினிமாவில் இருந்து தமிழக அரசியலை தனியாக பிரிக்க முடியாது என்று கூறலாம். அது மட்டுமல்லாமல் சினிமாவில் வீரா வேசமாக வசனங்களை பேசி மக்களுக்கு பல நன்மைகளை செய்வது போல நடித்து ஆட்சியைப் பிடித்தது பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.


இதில் எம்ஜிஆரை தவிர தமிழகத்தில் சொந்தமாக கட்சியை ஆரம்பித்த நடிகர்களின் எண்ணிக்கையை பார்த்தால் 11 பேர் இருக்கிறார்கள் என்று கூறலாம். ஆனால் அந்த 11 பேரில் கிட்டத்தட்ட 9 பேர் போண்டியாகி நடுத்தெருவுக்கு வந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

இப்போது யார் அந்த 11 நபர்கள் கட்சியை ஆரம்பித்த நடிகர்கள் என்பதை பார்க்கலாம்.

--Advertisement--

இதையும் படிங்க: ஈரமான டூ பீஸ் நீச்சல் உடையில் புன்னகையரசி சினேகா.. ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

முதலில் எம்ஜிஆர் திராவிட முன்னேற்ற கழகம். இதனை அடுத்து சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார் எனினும் அந்த கட்சி இருந்தது மக்களுக்கே தெரியாது.

மேலும் பாக்யராஜ் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையை கொண்ட டி ராஜேந்திரன் தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். எனினும் இது பெரிய அளவு வெற்றியை தரவில்லை.


2005 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சி இன்று வரை செயல்பட்டு வருகிறது. 2007-ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவ கட்சியை ஆரம்பித்தார். தற்போது இவர் பிஜேபியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

அதுபோலவே நவரச நாயகன் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியும் தற்போது இருக்கிறதா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை.

நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் கட்சியை ஆரம்பித்து இருந்தார். இந்த கட்சி ஜாதி சார்ந்தது என்ற முத்திரை குத்தப்பட்டது. இன்று வரை அந்த கட்சி பற்றிய விஷயங்கள் வெளிவரவில்லை.

யாருமே எதிர்பாராத சமயத்தில் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தல்களில் களம் இறங்கி போட்டியிட ஆரம்பித்தார். இதனை அடுத்து தற்போது திமுகவில் கூட்டணி அமைத்து இருப்பதை அடுத்து இவருக்கு இருந்த பெயரும் கெட்டுப் போனது என்று சொல்லலாம்.


தன்னுடைய வாயால் கெட்டுப் போய் நிற்கும் நடிகர் மன்சூர் அலிகான் 2021 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியை தற்போது என்ன செய்கிறது என்பது அவருக்கே தெரியுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது.

கடைசியாக தளபதி விஜய் தற்போது அரசியலில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போடுவதாகவும் முழு நேர அரசியல்வாதியாக மாறப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

போண்டியான கதை..

எனவே இதுவரை 11 க்கும் மேற்பட்ட நடிகர்கள் கட்சியை ஆரம்பித்தும் அதில் சிவாஜி கணேசன், கருணாஸ், கார்த்திக், மன்சூர் அலிகான், டி ராஜேந்திரன், பாக்யராஜ் போன்றவர்கள் போண்டியான கதை உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இதையும் படிங்க: வயசாகியும் அடங்காத குயின் நடிகை.. இளம் நடிகருடன் விடிய விடிய பஜனை..


அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தற்போது இவ்வளவு நபர்கள் கட்சி ஆரம்பித்து அதில் ஒன்பது தமிழ் நடிகர்கள் போண்டியானது குறித்து அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து பேசி வருவதோடு மட்டுமல்லாமல் தளபதியாக விளங்கும் தளபதி விஜய் தனது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி அடைந்து முன்னேறுவாரா? அல்லது மற்ற கட்சிகளை போல இவரது கட்சியின் நிலையும் மாறுமா? என்ற கோணத்தில் தற்போது பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.