ஒரு கேள்வி.. பதட்டமான உதயநிதி ஸ்டாலின்.. தமிழக வெற்றி கழகம் பற்றி சொன்ன ஒரு வார்த்தை..!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை துவங்கி இருக்கிறார். இது திரையுலக வட்டாரம் மட்டுமில்லாமல் தமிழக அரசியல் வட்டாரத்தையே கிடுகிடுக்க வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

பல்வேறு கட்சிகள் நடிகர் விஜயின் திடீர் அறிவிப்பால் மிரண்டு போயிருக்கின்றன என்பதுதான் உண்மை. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் நடிகர் விஜயின் இந்த நகர்வுக்கு பெருவாரியான ஆதரவு இருக்கிறது என்பதை கண்கூட பார்க்க முடிகிறது.

இதனை நடிகர் விஜய் வாக்காக மாற்றி காட்டுவாரா..? என்பது தான் அவர் முன்னே இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலான விஷயம். நடிகர் விஜயகாந்த் தவிர மார்க்கெட் இழந்து வயதான பின்பு கட்சி தொடங்கக்கூடிய நடிகர்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது கிடையாது.

நவரச நாயகன் கார்த்தி, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், உலக நாயகன் கமல்ஹாசன் என பல நடிகர்கள் கட்சி தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பெரிய வரவேற்பு இருந்ததாக தெரியவில்லை.

நடிகர் விஜயகாந்த் ஆரம்பம் முதலே பல்வேறு அரசியல் கருத்துகளை பேசி தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஒரு அரசியல் கட்சி போலவே நடத்தி வந்தவர் அதனால் அவருக்கு முதல் தேர்தலிலேயே 10 சதவீத வாக்குகள் கிடைத்தது. அதற்கு அடுத்த தேர்தலில் கூட்டணி அமைத்து இருபதற்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் விஜயகாந்த் அவர்கள்.

அதன் பிறகு நடிகர் விஜய்க்கு தான் இப்படி ஒரு மவுஸ் இருப்பதை பார்க்க முடிகிறது. தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே சினிமாவை விட்டு விழகி அரசியலில் தடம் பதிக்க தயாராகிவிட்டார் விஜய்.

மக்களிடமும் வரவேற்ப்பு இருப்பதை பார்க்க முடிகின்றது. இதனை நடிகர் விஜய் வாக்காக மாற்றுவாரா என்பது அவர் முன்னிருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலான விஷயம். ஆனால், பொதுமக்கள் அவரை நோக்கி வருகிறார்கள் என்பதை கண்கூட நம்மால் பார்க்க முடிகிறது.

அடுத்த அடுத்த வருடங்களில் நடிகர் விஜயின் அரசியல் நகர்வு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு பொது வாழ்க்கைக்கு வரவேற்கும் விதமாகவே அவர்களுடைய கருத்து இருக்கிறது. இந்த நேரத்தில் நடிகரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத உதயநிதி ஸ்டாலின் சற்று பதட்டமானதை பார்க்க முடிந்தது. நான் இன்னும் அந்த அறிவிப்பை பார்க்கவே இல்லை பார்க்காத ஒரு விஷயத்தை பற்றி என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்? பார்த்த பிறகு பதில் சொல்கிறேன்.

அரசியலுக்கு வருவது பற்றி கேட்டீர்கள் என்றால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் இவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றெல்லாம் யாரும் யாருக்கும் சொல்ல முடியாது அவர் அரசியலில் ஈடுபட தயாரானால் அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது என கூறிவிட்டு தன்னுடைய காரில் ஏறி சென்றார்.

   

--Advertisement--