நடிகர் விசுவின் மூன்று மகள்களை பார்த்துள்ளீர்களா..?

நடிகர் விசுவின் மூன்று மகள்களை பார்த்துள்ளீர்களா..?

தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் இப்படி பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வந்தவர் தான் நடிகர் விசு.

இவர் முதன் முதலில் கே பாலச்சந்திரிடம் துணை இயக்குனராக பணியாற்றினார். அப்போது கிடைக்கும் பட வாய்ப்புகளில் சின்ன சின்ன நூல்களில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.

இதன் பிறகு நடிகர் விசு நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் ரஜினியின் தில்லுமுல்லு திரைப்படம் தான். அந்தப் படத்தில் குணசித்திர ரோலில் நடித்தது மட்டும் இல்லாமல் ரஜினிக்கு டப்பிங் செய்திருந்தது விசு தான்.

நடிகர் விசுவின் திரைப்பயணம்:

அந்த படத்தை தொடர்ந்து குடும்பம் ஒரு கதம்பம் என்ற பாடல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்த பெரும் புகழ்பெற்றார் .

இதையும் படியுங்கள்:நைட்டு ஒரு மணி.. நடன இயக்குனரை காரில் வைத்து நயன்தாராவும் திரிஷாவும் செய்த சம்பவம்..!

தொடர்ந்து கண் மணி பூங்கா படத்தின் முதலில் இயக்குனராக அறிமுகமான விசு தொடர்ந்து அடுத்தடுத்து மணல் கயிறு, ரகசியம், சகாப்தம், சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட மெகா ஹிட் பிளாக்பஸ்டர் படங்களை இறக்கி மாபெரும் வெற்றி கண்டார்.

இந்த திரைப்படங்களை தாண்டி டிவிகள் டிவி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் நடித்து இல்லத்தரசிகளின் மனதிலும் நல்ல இடத்தை பிடித்திருந்தார்.

மேடை நாடகம் கலைஞ்சராக தனது வாழ்க்கையை துவங்கி, தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார்.

மெகா ஹிட் அடித்த சம்சாரம் அது மின்சாரம்:

இவர் இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் ரீமேக் எடுக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷின் மகன் யாரு தெரியுமா..?

தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனராகி சமூக, குடும்பத் திரைப்படங்களை யதார்த்தமான கண்ணோட்டத்தில் எடுத்து புகழ் பெற்றார் விசு.

நடிகர் விசுவின் மகள்கள்:

நடிகர் விசு 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்கள்.

இதனிடையே நடிகர் விசு கடந்த 2020ம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார். ஈர்த்து மரணம் தமிழ் திரையுலகத்தியே வேதனையில் ஆழ்த்தியது.