Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“அஜீரணத்தை சரியாகி சுறுசுறுப்பை தூண்டும் இஞ்சி தக்காளி கார சட்னி..” – இப்படி செய்யுங்க..!

 பலவிதமான சட்னிகளை சுவைத்து சாப்பிட்டிருக்கக் கூடிய நாம் சில சமயம் அஜீரணக் கோளாறுகளால் திண்டாடும் சமயத்தில் இந்த இஞ்சி தக்காளி கார சட்னியை அரைத்து இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவதன் மூலம் உங்கள் அஜீரண கோளாறு நீங்கி சுறுசுறுப்பையும் ஏற்படுத்தித் தரும்.

அப்படிப்பட்ட இஞ்சி தக்காளி கார சட்னியை எப்படி அரைக்க வேண்டும் என்பதை எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

 இஞ்சி தக்காளி கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்

 1.சின்ன வெங்காயம் 20

2.பச்சை மிளகாய் 4

3.இஞ்சி ஒரு துண்டு

--Advertisement--

4.தக்காளி இரண்டு

5.தேவையான அளவு உப்பு

6.ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய்

 செய்முறை

 முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றுங்கள்.இந்த எண்ணெய் சூடானதும் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

 சின்ன வெங்காயம் ஓரளவு வதங்கிய பிறகு அதனோடு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் இவை இரண்டும் நன்கு வதங்கிய பிறகு தக்காளியை துண்டு துண்டாக வெட்டி போட்டு வதக்கிக் கொள்ளவும்.

 இதனை அடுத்து இதற்கு தேவையான அளவு உப்பை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு எந்த கலவையை ஒரு தட்டத்தில் மாற்றி சூடு ஆறும் வரை காத்திருக்கவும். சூடு ஆறிய பிறகு இதை மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும்.

 இப்போது இதனோடு ஒரு துண்டு இஞ்சியை தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டு அரைத்து விடுங்கள். இது நன்கு அரைத்த பிறகு இதை வேறொரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 தாளிக்க வேண்டும் என்றால் தாளித்தால் போதுமானது இல்லை என்றால் அப்படியே பச்சையாக தேங்காய் எண்ணெய் சிறிதளவு விட்டு பரிமாறலாம்.

 இப்போது உங்களுக்கு அஜீரணத்தை குறைத்து சுறுசுறுப்பை தூண்டும் இஞ்சி தக்காளி கார சட்னி தயார்.இதை உங்கள் வீட்டில் செய்யும் இட்லி மற்றும் தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் சுவை அலாதியாக இருக்கும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top