Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஆம்பளைங்க உடம்பில் ஒரு நாளாவது.. திரிஷாவின் விவகாரமான ஆசை..! அதையும் ஓப்பனா சொல்லிட்டாரே..!

தமிழ் திரையுலகில் தற்போது உச்சகட்ட நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை திரிஷா முதன் முதலில் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தை நடித்த இவர் மௌனம் பேசுதே படத்தில் கதாநாயகியாக நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார்.

நடிகை திரிஷா..

இவர் நடிப்பில் வெளி வந்த சாமி, கில்லி போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரிதாக பேசப்பட்டதோடு இவரை கனவு கன்னியாக நினைக்கவும் வைத்தது.  தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் இரண்டாவது இன்னிங்சிலும் கலக்கி வருகிறார்.

அந்த வகையில் மணிரத்தினத்தின் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் பகுதி இரண்டில் குந்தவையாக நடித்து இளசுகளின் மனதில் தனது ஆதிக்கத்தை மீண்டும் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

---- Advertisement ----

குறிப்பாக வந்திய தேவனை காதலிக்கும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் மீண்டும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து டாப் நடிகைகே சவால் விடக் கூடிய வகையில் அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை பெற்றார்.

எவர்கிரீன் நடிகை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை திரிஷா இதனை அடுத்து அண்மையில் தளபதி விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

ஆம்பளைக்கு உடம்பில் ஒரு நாளாவது..

தற்போது தல அஜித்தோடு மற்றொரு படத்தில் நடித்து வரக்கூடிய இவர் 41 வயது ஆனாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்று வரை மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கக்கூடிய அளவு சினிமாவில் கொடி கட்டி பறக்கிறார்.

இந்நிலையில் திரிஷா பேசிய பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் அவர் சொல்லும் போது தனக்கு ஒரு சின்ன ஆசை இருக்கு அது என்னவென்றால் ஒரு நாளாவது தான் ஆணாக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதையும் ஓபனா சொல்லிட்டாங்க..

மேலும் ஒரு பையனாக இருப்பது எப்படி அவர்களின் உடல் அமைப்பு, அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலில் இருப்பதாகவும் இது பற்றி தன்னுடைய அம்மாவிடம் அடிக்கடி சொல்லி இருப்பதாகவும் திரிஷா பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டது.

இதனை அடுத்து திரிஷாவின் இந்த விபரீதமான ஆசையை அவர் ஓப்பனாக சொல்லி இருப்பதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இது எப்படி சாத்தியம் ஆகும் என்று பேசி வருவதோடு வில்லங்கமான ஆசை இப்படி திரிஷாவுக்கு ஏற்பட்டு இருப்பதை நினைத்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அதிகளவு பார்க்கப்படுகின்ற விஷயமாக மாற்றி விட்டார்கள்.

மேலும் இவரது விபரீத ஆசை நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பது பற்றிய வழிகளை கூகுளில் தேட ஆரம்பித்து இருக்கும் ரசிகர்கள் இவரை பங்கமாக கலாய்த்து இருப்பதோடு இது மாதிரி ஆசை தேவைதானா என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top