41 நாட்கள் நடந்த கொடுமை.. ரகசியம் உடைத்த திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன்..

41 நாட்கள் நடந்த கொடுமை.. ரகசியம் உடைத்த திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன்..

நடிகை திரிஷா விவகாரம், கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டில் கூவத்தூரில் கொண்டாட்டம் போட்ட அதிமுக எம்எல்ஏக்களின் வண்டவாளம் அனைத்தும் தண்டவாளம் ஏறியிருக்கிறது.

திரிஷா

அதிமுக கட்சி சார்ந்த ஒருவர், எம்எல்ஏக்கள் என்னென்ன கூத்தாடி, கொண்டாட்டம் போட்டார்கள் என்பதை சொல்வதாக, கடைசியில் திரிஷா பெயரையும் வம்பிழுத்து அவதூறு பரப்பியிருக்கிறார். இதில் கருணாஸ் பெயரும் டேமேஜ் ஆகி கிடக்கிறது.

சினிமாவில் நடிப்பவர்கள் என்றாலே, இதுபோன்ற மிக இழிவான விமர்சனங்களுக்கும், தவறான குற்றச்சாட்டுகளும் ஆளாக வேண்டியிருக்கிறது. அதுவும் நடிகைகள் என்றால் மிகவும் அவமானப்படுத்தி விடுகின்றனர் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக இருக்கிறது.

பெட்ரூம் காட்சிகளிலும்…

இதற்கு காரணம், சினிமாவில் அவர்கள் கவர்ச்சியாக நடிப்பதும், சக நடிகர்களுடன் பெட்ரூம் காட்சிகளிலும் நடிப்பதும் பலரது பார்வையில் அது நடிப்பாக மட்டுமே தெரியாமல், இழிவான ஒரு எண்ணத்துக்கும் காரணமாகி விடுகிறது.

அதுதான் இதுபோன்ற அபாண்ட குற்றச்சாட்டுகளை நடிகைகள் மீது சர்வ சாதாரணமாக சொல்லி விடுகின்றனர் என்று பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

குளியல் காட்சி வீடியோ

தமிழ் சினிமா நடிகைகளில் நயன்தாரா, திரிஷா ஆகிய இருவரும்தான் அதிகளவில் அடிக்கடி விமர்சனங்களில் சிக்கியவர்களாக இருக்கின்றனர். அதிலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு, திரிஷாவின் குளியல் காட்சி வீடியோ வெளியாகி பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்:  எனக்கு இந்த பழக்கம் இருக்கு.. கல்யாணம் தேவையில்ல.. வெளிப்படையாக கூறிய ஆண்ட்ரியா.. விளாசும் ரசிகர்கள்..

இப்போது, இந்த கூவத்தூர் சம்பவம் அவரை மிகவும் பாதிக்கச் செய்திருக்கிறது. ஏற்கனவே, விஜய்க்கும் திரிஷாவுக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இருப்பதாக புரளி வரும்நிலையில், இதுவும் இப்போது சேர்ந்துக்கொண்டுள்ளது.

எனினும் இதுபோன்ற விவகாரங்களை, விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் கடந்து போகிற தைரியம் கொண்டவர் திரிஷா என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

திரிஷாவின் தாய்

இதுகுறித்து நடிகை திரிஷாவின் தாய் உமாகிருஷ்ணன் கூறியதாவது,
நடிகை திரிஷா தெலுங்கில் வருஷம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் கிட்டத்தட்ட 41 நாட்கள் மழையில் நனைந்தபடி தான் ஷூட்டிங் இருந்தது.

இதையும் படியுங்கள்:  ஒரே நைட் தான்.. 4 மாசம்.. காதலன் செய்த வேலை.. பிரியா பவானி ஷங்கர் கண்ணீர்..!

கடுமையான உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டது. அதை விட்டு ஓடி வந்து விடலாமா என்று அளவுக்கு கொடுமையாக உணர்ந்தோம்.

கஷ்டப்பட்ட ஒரு படம்

இதுதான் திரிஷா வாழ்க்கையிலேயே அவள் நடிப்பதற்கு கடுமையாக கஷ்டப்பட்ட ஒரு படம் என்று நான் கூறுவேன், என திரிஷாவின் தாய் உமாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

இதன்மூலம் வருஷம் என்ற படத்தில் 41 நாட்கள் நடந்த கொடுமையாக, மழையில் நனைந்தபடி திரிஷா கஷ்டப்பட்டு நடித்த அந்த ரகசிய விஷயம் கூறியிருக்கிறார் திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன்