மறைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..?

மறைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..?

கருப்பாக இருந்தாலும் சில நடிகர்கள் மட்டும்தான் களையாக இருக்கின்றனர். அந்த வகையில், விஜயகாந்தை குறிப்பிட்டுச் சொல்வார்கள். அவரது கருப்பு தான் பலருக்கும் அவரை மிகவும் பிடித்துப் போக காரணமாக இருந்தது.அதனால் அவரை கருப்பு எம்ஜிஆர், கருப்பு நிலா என்றும் கூட அழைத்தனர். அந்த மாதிரியான ஒரு கருப்பு நடிகராக தமிழ் சினிமாவுக்குள் வந்து நடித்து ஜெயித்தவர்தான் நடிகர் முரளி.

முரளி

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏகப்பட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் முரளி. இவரை நடிகர் முரளி என்று சொல்வதை விட இதயம் முரளி என்றுதான் ரசிகர்கள் மத்தியில் அடையாளமாக புகழ்ந்து சொல்லப்படுவார்.

மறைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..?

இதயம் முரளி

ஏனெனில் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான ஒரு படமாக இருந்தது இதயம் படம். இந்த படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை முரளி வெளிப்படுத்தி இருப்பார்.
காதலை சொல்லாமல் மனதுக்குள் வைத்து ஏங்கும் இளைஞர்களை கூட இதயம் முரளி மாதிரி இருக்காதடா, காதலை வெளிப்படையாக சொல்லிடு என நண்பர்கள் சொல்வது போன்ற சில காட்சிகள் தமிழ் சினிமாவிலேயே வந்திருக்கிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே என்ற பாடலும், பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா என்ற பாடலும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவை.

இதையும் படியுங்கள்: திருமணம் ஆகவில்லை.. 25 வயசில் எடுத்த முடிவு.. அன்றே கணித்த மரணம்.. கொடூர வில்லன்.. நிறைவேறாத டேனியல் பாலாஜி கடைசி ஆசை..!

பகல் நிலவு படத்தில்…

கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகர் முரளி. துவக்கத்தில் கன்னட படங்களில்தான் நடித்தார் இவர். அதன்பிறகு 1984ம் ஆண்டில் பூவிலங்கு என்ற படத்தில் நடிகர் முரளி தமிழில் அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய பகல் நிலவு படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தில் சரத்பாபு, ரேவதி, சத்யராஜ் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

தொடர்ந்து அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, புது வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை, புதியவன், ஆனந்தம், கடல் பூக்கள், சமுத்திரம், பொற்காலம், வெற்றிக்கொடிக்கட்டு, சுந்தரா டிராவல்ஸ் என பல படங்களில் நடித்தார் முரளி.

மறைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..?

2 மகன்கள், ஒரு மகள்

நடிகர் முரளிக்கு கடந்த 1987ம் ஆண்டில் ஷோபா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்களும் மற்றும் காவ்யா என்ற மகளும் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நடிகர் விஸ்வேஸ்வர ராவ் திடீர் மரணம்..! இது தான் காரணமா..?

நடிகர் அதர்வா

நடிகர் முரளி தனது 46வது வயதில், 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாரடைப்பால் காலமானார். அவர் கடைசியாக தனது மகன் அதர்வா நடித்த பாணா காத்தாடி என்ற படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். அதுதான் அவரது கடைசி படம்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான அதர்வா, அவரது அம்மா புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், மறைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்து, இவரே சினிமா நடிகையை போல, இந்த வயதிலும் இத்தனை அழகாக இருக்கிறாரே என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

மறைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..?