Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஒரு நாளைக்கு 10 லட்சம்.. அந்த வீட்டில் குவிந்து கிடக்கும் ஆதாரம்.. வெளிவராத வடிவேலுவின் உண்மை முகம்..!

ஒரு நாளைக்கு 10 லட்சம்.. அந்த வீட்டில் குவிந்து கிடக்கும் ஆதாரம்.. வெளிவராத வடிவேலுவின் உண்மை முகம்..!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு வைகைப்புயல் என தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். மதுரை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து,

வறுமையில் வாடிய வடிவேலு குடும்பம்:

வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது பிரபல நடிகர் ஆன ராஜ்கிரணின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார்.

--Advertisement--

என் தங்கை கல்யாணி திரைப்படத்தின் மூலமாக டி ராஜேந்திரன் இயக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

நடிகர் வடிவேலு ஆரம்பத்தில் நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றி நகைச்சுவை கதாநாயகனாக பார்க்கப்பட்டார்.

பின்னர் இவரது தந்தை இறந்து விடவே வறுமையில் வாடிய குடும்பத்தை கைப்பற்ற சினிமாவில் நடிக்க வேண்டும் என மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்தார்.

சென்னையில் வந்து முதன் முதலில் போட்டோக்களுக்கு கண்ணாடி பிரேம் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை பார்த்து வந்தார்.

அந்த சமயத்தில் தான் ஒரு முறை மதுரைக்கு செல்லும்போது ராஜ்கிரண் உடன் எதிர்பாராத விதமாக அறிமுகம் கிடைக்க அவரோ வடிவேலுவின் காமெடி பேச்சை கேட்டு திரைப்படத்துறையில் வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.

ராஜ்கிரண் கொடுத்த வாய்ப்பு:

பின்னர் ராஜ்கிரன் அலுவலகம் வீடு என அவருக்கு எல்லா தேவையான வேலைகளையும் நடிகர் வடிவேலு பார்த்து வந்தார்.

ராஜ்கிரண் இயக்கிய என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலுவை திரையில் அறிமுகப்படுத்தினார் தொடர்ந்து ரஜினி, கமல், சூர்யா, அஜித், விஷால், விக்ரம் என

பல சூப்பர் ஹிட் ஹீரோவின் படங்களில் தொடர்ச்சியாக காமெடிகளில் நடித்த வந்தார். இவரது காமெடி காட்சி இல்லாத படங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தனக்கான மார்க்கெட் பிடித்து தனி இடத்தில் அமர்ந்தார்.

வடிவேலு உச்சத்தை அடைய அடைய வாய் கொழுப்பும், ஆணவமும் அதிகமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் நடிகர் வடிவேலு குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோ ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது நாள் கணக்கில் சம்பளம் வாங்கிய ஒரு நடிகர் வடிவேலு ஒரு நாளைக்கு பத்து லட்சம் ரூபாய் அவர் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார்.

இந்த நாள் கணக்கில் சம்பளம் வாங்கும் விஷயத்தை அறிமுகப்படுத்தியவர் நடிகர் கவுண்டமணி அதன்பிறகு அனைத்து நடிகர்களும் இதனை பின்பற்றி வருகிறார்கள்.

தலைக்கேறிய ஆணவம்:

அந்த வகையில் நடிகர் வடிவேலுவும் ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் வாங்க கூடியவர். ஆனால் 10 லட்சம் ஒரு நாளைக்கு வாங்கினால் கூட தன் உடன் நடிக்கும் நடிகர்களுக்கு,

ஆயிரம் இரண்டாயிரம் இதை தாண்டி சென்று விடாமல் பார்த்துக் கொள்வார். தயாரிப்பாளர்கள் துணை காமெடி நடிகர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் என கொடுக்க முன் வந்தாலும்,

அதனை கொடுக்க விடாமல் இவர்களுக்கு எல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் அந்த ரேஞ்சிலேயே வைத்திருக்க வேண்டும் அதிகமாக கொடுத்தீங்கன்னா,

அடுத்த புரோட்டீஸரும் இவ்வளவு கொடுக்கணும்னு எதிர்பார்ப்பானுங்க. அதனால நீங்க கொடுக்காதீங்க நீங்க கொடுத்துட்டு போயிடுவீங்க.

ஒரு நாளைக்கு ரூ. 10 லட்சம் சம்பளம்:

அடுத்த தயாரிப்பாளர் என்ன பண்ணுவார்?அதையும் யோசித்துப் பாருங்கள் என்று கூறி அதிக சம்பளம் கொடுக்க வரும் தயாரிப்பாளர்களையும் தடுத்து விட்டு இருக்கிறார் வடிவேலு என்று கூறியிருக்கிறார்.

மேலும் பட வாய்ப்புக்காக பல நடிகைகளை அவருடைய பண்ணை வீட்டில் வைத்து வேட்டையாடி இருக்கிறார்.

அவருடைய பண்ணை வீட்டில் அதற்கு உண்டான ஆதாரங்கள் குவிந்து கிடக்கும்.. வடிவேலு எப்படி பட்ட ஆள் என்பதற்கு அந்த பண்ணை வீடு தான் ஆதாரம். எனவும் பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன் .

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top