முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

கடந்த 2017ம் ஆண்டில் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரியா பவானி ஷங்கர். அடுத்து கடைக்குட்டி செல்லம் படத்தில், கார்த்தியின் முறைப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார்.

பிரியா பவானி ஷங்கர்

அடுத்து 2019ம் ஆண்டில் மான்ஸ்டர் என்ற படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக நடித்தார். அடுத்து களத்தில் சந்திப்போம், கசடற தபற, ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

டிவி சேனல்

துவக்கத்தில் டிவி சேனல் ஒன்றில் பணிபுரிந்தவர் பிரியா பவானி ஷங்கர். அதன்பிறகுதான் மேயாத மான் படத்தின் மூலம், தமிழ் சினிமாவுக்குள் வந்தார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.

இதையும் படியுங்கள்:  தோண்டப்பட்ட பழைய மேட்டர்… யார் அந்த பிரபல `நடிகர்’.. பெயர்… கூவத்தூர்.. புதிய ட்விஸ்ட்

மேயாத மான்

மேயாத மான் படத்தில் நடிகர் வைபவ் ஜோடியாக, காதலியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். நிறைய விளம்பர படங்களிலும் நடிக்கிறார்.

வண்டலூரில் படித்தேன்

அவர் முதன்முறையாக வாங்கிய சம்பளம் ககுறித்து ஒரு நேர்காணலில் நடிகை பிரியா பவானி ஷங்கர் கூறியதாவது,

நான் வாங்கிய முதல் சம்பளம் ரொம்பவும் ஸ்பெஷலானது. நான் படித்த கல்லூரி, வண்டலூரில் உள்ளது. நான் அப்போது வேலை செய்த சேனல், ஆபீஸ் தி நகரில் இருந்தது.

ஒரு நாளைக்கு ஒருமுறை போயிட்டு வர்றதுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மேல ஆகும். வாரத்து ஒரு அஞ்சு நிகழ்ச்சி இருக்கும். வேலை என்னமோ 20 நிமிஷம்தான். அப்போ வேலை செஞ்சா சம்பளம் கொடுப்பாங்க அப்படீங்கறது கூட எனக்கு தெரியாது.

அந்த வேலை எனக்கு பிடிச்சது. அதனால் நான் பண்ணினேன். எனக்கு முதல் மூனு மாசம் சம்பளம் எல்லாம் கொடுக்கலே. அதுக்கு அப்புறம்தான், கூட இருக்கிற மத்த ஆங்கர்ஸ் எல்லாம் இருப்பாங்களே, அவங்க எல்லாம் சம்பளம் வாங்கறாங்க. அப்போ உனக்கு எவ்ளோ சம்பளமுன்னு கேட்கறாங்க.

இதையும் படியுங்கள்:  அந்நியன் போல மாறிய நயன்தாரா.. குழப்பத்தில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு..?

அப்போதான், அட ஆமா நமக்கு இதுவரைக்கும் சம்பளமே கொடுத்தது இல்லையே, அப்படீன்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் அங்க இருக்கிற எச்.ஆர் கிட்ட போய் சேலரின்னு கேட்டேன்.

முதல் சம்பளம்

அப்போ அவர், சேலரியா, இப்போ தானே சேர்ந்தீங்க அப்படீன்னு கேட்டார். அதுக்கு அப்புறம் ஒரு நாள் பல்க்கா ஒரு பேமெண்ட் வந்தது. அப்போ கணக்கு போட்டு பார்த்தால், ஒரு நாளைக்கு எனக்கு 350 ரூபாய் சம்பளமுன்னு தெரிய வந்துச்சு.

முதன் முதலில் சம்பளம் வாங்குனப்போ ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன், என்று பிரியா பவானி ஷங்கர் ஒப்பனாக கூறியிருக்கிறார்.