அப்பாவுக்கு செய்த துரோகத்திற்கு பிராயச்சித்தமாக மகனுக்கு வடிவேலு செய்யவுள்ள நன்றி கடன்..

அப்பாவுக்கு செய்த துரோகத்திற்கு பிராயச்சித்தமாக மகனுக்கு வடிவேலு செய்யவுள்ள நன்றி கடன்..

கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான விமர்சனங்களில் சிக்கிக் கொள்பவராக இருக்கிறார் நடிகர் வடிவேலு. குறிப்பாக நடிகர் விஜயகாந்த் மறைவின் போது அவருக்கு நேரில் வந்து வடிவேலு அஞ்சலி செலுத்தவில்லை.

நேரில் வர அச்சமாக இருந்திருந்தால், ஒரு அறிக்கை வாயிலாக வடிவேலு இரங்கல் செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருந்தவர். பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.

குறிப்பாக 2000ம் ஆண்டுகளில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்தவர். துபாய், சிங்கப்பூரில் உள்ளிட்ட வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி, நடிகர் சங்க கடனை அடைத்தவர் போன்ற பெருமைகளுக்கு உரியவர்.

வடிவேலு

வடிவேலு வளர்ச்சியில், கேப்டன் விஜயகாந்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஏனெனில் என் ராசாவின் மனசிலே படத்தில் அறிமுகமான வடிவேலு, அடுத்து நடித்த படம் சின்னக்கவுண்டர். இந்த படத்தில் வடிவேலு நடிக்க எந்த கேரக்டரும் இல்லை என டைரக்டர் ஆர்வி உதயகுமார் விஜயகாந்திடம் மறுப்பு தெரிவித்தார்.

--Advertisement--

ஆனால் விஜயகாந்த், இந்த படத்தில் வடிவேலுவுக்கு கட்டாயம் நடிக்க வேண்டும். என்னுடன் குடைபிடித்து வரும் பண்ணை ஆள் போன்ற ஒரு கேரக்டரில் வடிவேலு நடிக்கட்டும் என்று கூறிவிட்டார்.

சின்னக்கவுண்டர்

அதன்பிறகுதான் சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலு நடித்தார். அதன்பிறகுதான் சிங்காரவேலன் நடித்த வடிவேலுவுக்கு தேவர்மகன் படத்தில் இசக்கி கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்தார் கமல்ஹாசன்.

ராணுவ கேப்டனா?

ஆனால் இந்த நன்றியை மறந்துவிட்டு, 2011ம் ஆண்டில் தேமுதிக தலைவராக விஜயகாந்த், சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து பிரசாரம் செய்தார் வடிவேலு. திமுக மேடைகளில் விஜயகாந்தை, இவர் எந்த கப்பலுக்கு கேப்டன், ராணுவ கேப்டனா, தண்ணீல கேப்டன் கப்பல் மிதக்குது என்று கிண்டலடித்தார்.

இதையும் படியுங்கள்: ப்பா.. ஓவர் டைட்டான டீசர்ட்.. குட்டியூண்டு பாவாடை.. கிறங்கி கிடக்கும் புள்ளிங்கோ..! 

நடிக்கும் வாய்ப்பை இழந்தார்

விஜயகாந்த் குறித்து வடிவேலு விமர்சித்த போது, பலரும் வடிவேலுவின் பேச்சை கேட்டு அவர் மீது கடுமையான விரக்தி அடைந்தனர். அவர் மீது ரசிகர்கள் வைத்திருந்த அபிமானமும் வெகுவாக குறைந்தது.

இந்த காலகட்டத்தில் டைரக்டர் ஷங்கரிடம் வடிவேலு தகராறு செய்ததால், 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பையும் இழந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 படங்கள் எல்லாம் சரியாக போகவில்லை. வடிவேலுவின் நடிப்பை ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை. ஏனெனில் அவரது முகமும், குரலும், நடிக்கிற விதமும் சுத்தமாக மாறிப் போயிருக்கிறது.

மாமன்னன்

இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த மாமன்னன் படத்தில் குணச்சித்திர நடிப்பில் அசத்தியிருந்தார். இதில் மாமன்னன் கேரக்டரில் வடிவேலு, ஒரு பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்போது நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் நடிகர் வடிவேலு. இந்த சூழலில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: பிக்பாஸ்ல பாத்தது.. கிளாமர் மகாராணி நமீதா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

விருதுநகர் தொகுதியில்…

இந்த முறை தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு வடிவேலு பிரசாரம் செய்ய உள்ள நிலையில், விருது நகர் தொகுதியில் மட்டும் நான் பிரசாரம் செய்ய மாட்டேன் என வடிவேலு உறுதியாக மறுத்திருக்கிறார்.

ஏற்கனவே விஜயகாந்த்தை எதிர்த்து பேசி நிறைய வாழ்க்கையில் பட்டு விட்டோம். இனியும் அவரது குடும்பத்தின் சாபத்துக்கு ஆளாகி விடக்கூடாது என்பதால் இந்த முடிவை வடிவேலு எடுத்திருக்கிறார்.

செய்த துரோகத்துக்கு…

அப்பா விஜயகாந்துக்கு செய்த துரோகத்திற்கு, பிராயச்சித்தமாக மகனுக்கு வடிவேலு செய்கிற நன்றி கடனாக, அவர் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்வதில்லை என தீர்மானித்திருக்கிறார்.