இதனால் தான் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு போனேன்.. ஜிபி முத்து வீடியோவை பகிர்ந்த வெங்கடேஷ் பட்..!

டிக்டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் ஜிபி முத்து. அதன் பிறகு ரீல்ஸ்சில் தொடர்ந்து பாட்டு பாடி, நடனமாடி பலரது கவனத்தை ஈர்த்து முக்கிய செலிபிரட்டியாக மாறியவர் இவர்தான். சில ஆண்டுகளுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முத்து போட்டியாளராக கலந்து கொண்டார். இப்போது சில படங்களிலும், அவர் நடித்து வருகிறார்.

ஜிபி முத்து

இந்நிலையில் டிவி சேனல்களில் அவர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நாறப் பயலே, செத்தப் பயலே என்பது இவரது டிரண்டிங் டயலாக் ஆகும்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர், அதிலிருந்து விலகி சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

குக் வித் கோமாளி

பொதுவாக டிவி சேனல்களில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால், அதை தொடர்ந்து நிகழ்ச்சி வருவது வழக்கமாக நடப்பதுதான். அதேபோல் விஜய் டிவி குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பை துவங்கியது.

---- Advertisement ----

ஆனால் ஐந்தாவது சீசன் தொடங்குவதற்கு முன்பே, அதன் பின்னணியில் நிறைய பிரச்சனைகள் நடந்திருக்கிறது.

ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியின் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட், திடீரென ஐந்தாவது சீசனில் நான் கலந்து கொள்ள போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர் என்று தொடர்ச்சியாக சிலர் ஐந்தாவது சீசனை விட்டு விலகிவிட்டனர்.

டாப் குக் டூப் குக்

இந்நிலையில் இப்போது சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சி வெளிவர இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் கலந்து கொள்கிறார். அதே போல் குக் வித் கோமாளிகளாக, நான்கு சீசன்களாக கலந்து கொண்ட கோமாளிகள், சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் ஜி பி முத்து, தீபா, மோனிஷா, பரத், தீனா, அதிர்ச்சி அருண் போன்றோர் ஏற்கனவே கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இப்படி பிரிச்சு பேசறீங்க?

இந்நிலையில் ஜி பி முத்து வழக்கம்போல தன்னுடைய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ரசிகர்கள் நீங்கள் ஏன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து போனீங்க என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

அதற்கு ஜிபி முத்து விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இப்போது சன் டிவியில் கூப்பிட்டாங்க. அங்க போய் இருக்கிறேன். நாளைக்கு விஜய் டிவியில் கூப்பிட்டால் நான் அங்க போக போறேன்.

எதற்காக நீங்க இப்படி பிரிச்சு பேசுறீங்க.எனக்கு தெரியல மீடியா மிஷன் நிறுவனம் தான் அந்த நிகழ்ச்சியை முதலில் தயாரித்திருக்காங்க. பிறகு அவங்க வெளியே வந்து இன்னொரு நிகழ்ச்சி தயாரிக்கிறாங்க. அதில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.

இதில் என்ன தப்பு இருக்கு

இதில் என்ன தப்பு இருக்கு, இதில் ஏன் கலந்துக்குறீங்க என்று எப்படி கேட்கலாம்? நான் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், நடுவர் எல்லாருமே அவர்களுக்கு எது சரின்னு படுதோ அதுதான் செய்வாங்க என்று பேசி இருக்கிறார்.

பங்கம் பண்ணிட்டே மேன்

இந்த வீடியோவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள வெங்கடேஷ் ஜிபி எதற்காக இந்த கம்யூனிகேஷன், ஆனால் பங்கம் பண்ணிட்டே மேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரே தயாரிப்பாளர், ஒரே நிகழ்ச்சி. அதனால் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு போனேன் என்று சொன்ன ஜிபி முத்து வீடியோவை பகிர்ந்திருக்கிறார் வெங்கடேஷ் பட்.

---- Advertisement ----