“பத்து தல” – தியேட்டரில் அனுமதி மறுப்பு – வெற்றிமாறன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை பாகம் 1 படம் இன்று வெளிியாகி இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், நரிக்குறவர் இன மக்கள், சினிமா தியேட்டருக்குள் அனுமதிக்கப்படாதது குறித்து, தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அது, தற்போது வைரலாகி வருகிறது.

சென்னையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடித்த ‘பத்து தல’ படம் ரிலீஸ் ஆனது. படத்தை பார்ப்பதற்காக, நரிக்குறவர் இன மக்கள் தியேட்டருக்கு வந்துள்ளனர். அங்கிருந்த தியேட்டர் ஊழியர்கள், அவர்கள் படம் பார்ப்பதற்கான டிக்கெட் வைத்திருந்தும் தியேட்டருக்குள் செல்ல அவர்களை அனுமதிக்கவில்லை. இதை செல்போனில் படம் பிடித்த அங்கிருந்த ஒருவர், சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இது, பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து., ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், :
நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தீண்டாமையை உடைத்து எறிந்தது சினிமா தியேட்டர்கள்தான். இன்றைய நிலையில், உழைக்கும் மக்களை தியேட்டருக்குள் அனுமதிக்காதது தீண்டாமையான செயலில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.

இது ஆபத்தான போக்கை காட்டுகிறது. பல தரப்பு எதிர்ப்புக்கு பிறகு, அவர்களை படம் பார்க்க தியேட்டருக்குள் அனுமதித்தார்கள் என்றாலும் இந்த நிகழ்வை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வை, வன்மையாக கண்டிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

--Advertisement--