Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

இணையத்தில் கசிந்த விசித்ராவின் அந்த புகைப்படம்.. யாரோட வேலை என ஒப்பனாக கூறிய விசித்ரா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை விசித்ரா நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து கலக்கியவர்.

இதையும் படிங்க: மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா.. காரணம் தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க.. மகிழ்ச்சியில் ரஜினிகாந்த்..!


இவர் அண்மையில் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மிக அற்புதமான முறையில் தனது திறமைகளை வெளிப்படுத்தி பிக் பாஸ் வெற்றியாளராக மாற முயற்சி செய்தார்.

நடிகை விசித்ரா..

ஒரு காலத்தில் தமிழ் திரைப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக இருந்த நடிகை விசித்ராவின் நடிப்பில் வெளி வந்த முத்து, ரசிகன், சுயம்பரம் போன்ற திரைப்படங்கள் அவரது பெயரை ரசிகர்களின் மனதில் உச்சரிக்க வைத்தது.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் சன் தொலைக்காட்சியில் வேணு அரவிந்த் அவர்களுக்கு இணையாக வாழ்க்கை என்ற தொடரில் நடித்திருந்தார்.

---- Advertisement ----


மேலும் இவர் மாமி சின்ன மாமி என்று தொலைக்காட்சி தொடரில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இந்த தொடரானது சன் டிவியில் 2019 ஆம் ஆண்டு வெளி வந்தது.

போட்டோவால் வந்த பிரச்சனை..

பி ஏ சைக்காலஜி எம்எஸ்சி சைக்கோ தெரபி கவுன்சிலிங் போன்ற படிப்புகளை முடித்திருக்கும் இவர் 2001 ஆம் ஆண்டு ஷாஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இவர் தன் தோழியோடு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் வந்த பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

ஓபன் ஆக பேசிய விசித்ரா..

மேலும் சமீபத்திய பேன்ஸ் மீட்டில் கலந்து கொண்ட பிக் பாஸ் விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசி இருக்கிறார். அத்தோடு நான் எனக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி பேசுவேன் என்று கூறித் தான் இந்த நிகழ்ச்சிக்குள் சென்றேன் என்ற உண்மையை கூறினார்.


மேலும் அவரது குடும்பத்தாரும் உறவினர்களும் அங்கு நடக்கும் விஷயங்களை நீ கூற வேண்டாம் என்று சொல்லி தான் அனுப்பினார்கள். தப்பு செய்தவர்கள் நிம்மதியாக இருக்கும் போது பாதிக்கப்பட்ட நான் எதற்காக பயப்பட வேண்டும் என எனது குடும்பத்தாரின் பேச்சை மீறி சொன்னதற்கு காரணம் எந்த ஒரு பெண்ணுக்கும் இப்படி நடக்கக் கூடாது என்ற ஒரு பரந்த நோக்கத்தில் தான்.

23 ஆண்டுகள் கழித்து பேசியதால் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டால் எத்தனை ஆண்டுகள் அந்தப் பெண் ரிவெஞ் எடுப்பார் என தெரிய வேண்டும். எனக்கு உதவி செய்ய அப்போது யாரும் இல்லை எனக்கான மேடை கிடைத்ததும் நான் அதைச் சொல்லி விட்டேன்.

மேலும் சினிமாவை விட்டு தற்போது விலகி வாழக்கூடிய நான் என் தோழியோடு திருமண நிகழ்வு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானதை அடுத்து தான் மீண்டும் சினிமாக்குள் வர காரணமாகி விட்டது என்பதை தெரிவித்தார்.


இந்த புகைப்படம் வெளி வரவில்லை என்றால் நிம்மதியாக இருந்திருப்பேன். மீண்டும் சினிமாக்களில் வர அந்த புகைப்படம் தான் காரணம் என்ற விஷயத்தை போட்டு உடைத்ததை அடுத்து இந்த விஷயமானது வைரலாக தற்போது இணையங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: டூ பீஸ் நீச்சல் உடையில்.. நீர்த்துழிகள் சொட்ட சொட்ட.. தீயாய் பரவும் ஜோதிகாவின் வீடியோ..!

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படம் தான் இவர் மீண்டும் ரீ என்ட்ரியாகி சினிமாவுக்குள் வர காரணமாக இருந்ததா என்று ஆச்சரியமாக கேட்டிருக்கிறார்கள். மேலும் ரசிகர்கள் இதை அறிந்து கொண்டு இணையத்தில் வைரலாக மாற்றி விடுவதோடு அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top