அப்போதே வேண்டாம் என சொன்ன விஜய்.. பேச்சை கேட்காமல் செய்த டேனியல் பாலாஜி..!

அப்போதே வேண்டாம் என சொன்ன விஜய்.. பேச்சை கேட்காமல் செய்த டேனியல் பாலாஜி..!

தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்களாக ரசிகர்களின் மனம் கவர்ந்த பல நடிகர்கள் மறைந்து போய்க்கொண்டே இருக்கின்றனர். உதாரணமாக கடந்த சில ஆண்டுகளாக முக்கிய பிரபல தமிழ் நடிகர்கள் மறைந்து வருகின்றனர்.

பாடகர், நடிகராக எஸ்பி பாலசுப்ரமணியம், இயக்குனர், நடிகர் விசு, நடிகர் விவேக், மயில்சாமி, மனோபாலா, டிபி கஜேந்திரன், கேப்டன் விஜயகாந்த், நடிகர் சேது, சமீபத்தில் காலமான சேஷூ, இப்போது நடிகர் டேனியல் பாலாஜி என முக்கிய நட்சத்திரங்கள் மறைவு, தமிழ் சினிமா ரசிகர்களை வேதனையடைய செய்கிறது.

டேனியல் பாலாஜி

நடிகர் டேனியல் பாலாஜி வில்லன் நடிப்பில் தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்டியவர். குறிப்பாக வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் கேரக்டரில் கமல்ஹாசனுக்கே ஈடு கொடுத்து நடித்திருப்பார். அடுத்து பொல்லாதவன் படத்தில், சொந்த அண்ணனையே ( கிஷோர்) வெட்டிக் கொலை செய்வார்.

நடிகர் முரளியின் தம்பி

வடசென்னை, பைரவா, பிகில், காக்க காக்க என பல படங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனம் பெற்றவர்தான் டேனியல் பாலாஜி. இவர் துவக்கத்தில் சித்தி சீரியலில் டேனியல் என்ற கேரக்டரில் நடித்ததால், டேனியல் என்ற பெயர், இவருடன் ஒட்டிக்கொண்டது. இவர் நடிகர் முரளியின் தம்பிதான்.

--Advertisement--

அதாவது முரளியின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு பிறந்தவர் முரளி. 2வது மனைவிக்கு பிறந்தவர் டேனியல் பாலாஜி. 50 வயதில் முரளி மறைந்த நிலையில், 48 வயதில் டேனியல் பாலாஜி நேற்றிரவு இறந்திருக்கிறார்.

இயக்குனர் ஆசை

இயக்குனராக வேண்டும் என்ற ஆசையோடு, தரமணி பிலிம்சிட்டி இன்ஸ்டிடியூட்டில் படித்த டேனியல் பாலாஜியின் கனவு நிறைவேறாமல் போயிருக்கிறது.

டேனியல் பாலாஜி மறைவு, தமிழ் சினிமாத்துறையினர், ரசிகர்கள் மத்தியில் பலத்த வேதனையை தந்துள்ளது. அவரது கண்களை தானமாக செய்திருக்கிறார். இதுவும் அவரை பற்றிய புகழை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஓவியாவா இது..? உடல் மெலிந்து விகாரமாக மாறிட்டாரே.. வைரலாகும் புகைப்படங்கள்..!

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் டேனியல் பாலாஜி நேர்காணல் ஒன்றில் பேசியது இப்போது வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விஜயுடன் டேனியல் பாலாஜி இயக்குனர் பரதன் இயக்கிய பைரவா என்ற படத்திலும், அட்லி இயக்கிய பிகில் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

பைரவா படத்தில்…

பைரவா படத்தில் நடித்த போது நீண்ட தலைமுடியுடன் காணப்பட்ட டேனியல் பாலாஜியை, மொட்டை அடிக்கமாறு டைரக்டர் பரதன் கூறியிருக்கிறார். படத்தில் உள்ள காட்சியமைப்பு படி டேனியல் பாலாஜி நிச்சயமாக மொட்டையடிக்க வேண்டும் என்பதுதான் அந்த காட்சிக்கு பொருத்தமாக இருந்தது.

இதையும் படியுங்கள்: அம்மாடியோவ்.. கீழ ஒண்ணுமே போடல.. அநியாய கவர்ச்சியில் சாந்தினி தமிழரசன்..!

விஜய் அட்வைஸ்…

ஆனால் விஜய், அதெல்லாம் வேண்டாம். இதனால் உங்கள் மத்த படங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சொல்லி இருக்கிறார். மேலும் மொட்டையடிப்பதற்கு முந்தைய நாள் கூட, டைரக்டரிடம் அதெல்லாம் மாட்டேன் என்று சொல்லிடுங்க என்றும் விஜய் கூறியிருக்கிறார்.

விஜய் பேச்சை மீறி…

ஆனால் டைரக்டர் அந்த கேரக்டருக்கு மொட்டையடித்தால்தான் சரியாக வரும் என்கிறார் என்பதற்காக விஜய் பேச்சைக் கூட கேட்காமல் நான் மொட்டையடித்துக்கொண்டேன் என்று அந்த நேர்காணலில் டேனியல் பாலாஜி கூறியிருப்பது, இப்போது செம வைரலாகி வருகிறது.

மொட்டையடிக்க வேண்டாம் என சொன்ன விஜய் பேச்சை கேட்காமல் படத்தின் கேரக்டருக்காக மொட்டையடித்த நடிகர் டேனியல் பாலாஜியின் அந்த தொழில் பக்தி, சிறந்த பாராட்டுக்குரியதே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.