ஜெயிச்ச காசு கைக்கு வரதுக்குள்ள இப்படியா..? விரத்தியின் உச்சத்தில்.. விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு..!

தமிழ் டிவி ரசிகர்களை ஈர்க்கும் வகையில் பல முன்னணி டிவி சேனல்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள், சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பி வருகின்றன.

அந்த வகையில் பிக்பாஸிற்கு போட்டியாக ஒளிபரப்பாகி வந்த சாகச ரியாலிட்டி ஷோவான ஜீ தமிழின் “சர்வைவர்” கடந்த சில வாரங்களுக்கு முன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு டெலிகாஸ்ட் செய்யப்பட்ட இந்த ரியாலிட்டிஷோ ஜான்சிஃபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் நடைபெற்றது.

ஒவ்வொரு போட்டியிலிருந்தும் ஒரு போட்டியாளர் வீதம் வெளியேற்றப்பட்டு கடைசியாக விஜயலட்சுமி, வானசா, சரண் ஆகியோர் இறுதி போட்டிக்குள் சென்றனர். 90 நாட்கள் நடந்த இந்த ரியாலிட்டி ஷோவில் முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகி அசத்தினார் நடிகை விஜயலட்சுமி.

சுமார் 2 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இறுதி போட்டியில் விஜய லட்சுமி, வேனசா மற்றும் சரண் கடுமையான போட்டிகளை எதிர்கொண்ட நிலையில், இறுதியில் விஜயலட்சுமி சாமர்த்தியமாக விளையாடி வெற்றி பெற்றார்.

பகீர் குற்றச்சாட்டு..!

இவர் வெற்றிபெற்றதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தாலும், சிலர் தொடர்ந்து இவரை சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.இதனால் வேதனை அடைந்து, இது குறித்து அவர் கூறுகையில், நிகழ்ச்சி தொடங்கும் போதே பரிசு பணம் கைக்கு வர இரண்டு மாதங்கள் ஆகும் என்று கூறி இருந்தனர் என்றும் அதனால் பரிசுப்பணம் ஒரு கோடி என் கைக்கு கூட வரவில்லை.

---- Advertisement ----

அதற்குள் தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் சமூக வலைத்தளங்களில் அதிகம் வருவது வேதனையாக உள்ளது என விரக்தியுடன் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப்பற்றி நெகட்டிவாக விமர்சனம் செய்ய ஒரு சிலர் பணம் கொடுத்து இருக்கிறார்கள் என்றும் பகீர் குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்துள்ளார். இந்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

---- Advertisement ----