விஷ்ணு விஷால் வாழ்க்கையில், விதி ‘கபடி’ விளையாடுகிறதா?

நடிகர் விஷ்ணு விஷால், நல்ல நடிகராக ரசிகர்களால் பாராட்டு பெறுபவர். வெண்ணிலா கபடிக்குழு படத்தில், மிக சாதாரண கேரக்டரில் நடித்த இவர், குள்ளநரிக்கூட்டம் படத்தில், நடிப்பில் தனிமுத்திரை பதித்தார்.

அடுத்து முண்டாசுப்பட்டி, சிலுக்குவார்பட்டி சிங்கம், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, இன்று, நேற்று, நாளை, கட்டாகுஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் வந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான ‘ ராட்சசன்’ தமிழ் சினிமாவில், மறக்க முடியாத படமாக அமைந்தது.

விஷ்ணு விஷால், சிறந்த கிரிக்கெட் வீரரும் கூட. சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஸ்டார் கிரிக்கெட் போட்டிகளில், அதிக ரன்களை குவிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

ஆனால், இவரது திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதனால் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். அடுத்து, ஜூவாலா கட்டா என்ற ஐதராபாத்தை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கணையை மணந்து கொண்டார்.  தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படமான லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஷ்ணு விஷால் ஒரு டிவிட்டர் பதிவு செய்திருந்தார்.

---- Advertisement ----

அதில், ‘பரவாயில்லை, நான் மறுபடியும் முயற்சி செய்தேன். மறுபடியும் தோற்று விட்டேன். மறுபடியும் பாடம் கற்றுக்கொண்டேன். போன முறை அது தோல்வியல்ல. என் தவறும் அல்ல, அது துரோகம், ஏமாற்றம்,’ என பதிவிட்டிருந்தார்.

அதைப் பார்த்த பலரும், முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை போல, இரண்டாவது மனைவியுடனும், இவருக்கு பிரச்னை போல் இருக்கிறது. இவரையும் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்து விடுவார் என, தகவல் பரவியது.

இதையறிந்த விஷ்ணுவிஷால், இது தொழில் சார்ந்து, எனக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்த பதிவு அது. இதற்கும், என் குடும்ப வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. இது, தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது, என வருத்தமாக கூறியதுடன்,  அந்த ட்விட் பதிவையும் நீக்கி விட்டார். எது உண்மை என, புரியாமல் ரசிகர்கள்தான் குழப்பத்தில் உள்ளனர்.

---- Advertisement ----