Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கணவரை பிரிந்த விஜய் டிவி பிரியாங்கா விரைவில் 2ம் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே பிரபலமான தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு வருபவர் தான் விஜே பிரியங்கா.

கலகலப்பான பேச்சு, காமெடியான எதார்த்தமான இவரது பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவனத்தையும் ஈர்த்தது.

தொகுப்பாளினி பிரியங்கா:

குறிப்பாக யாருடைய மனதையும் புண்படுத்தாமல் போட்டியாளர்களாக கலந்து கொள்ளும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் கலகலப்பாக பேசி சிரித்துக்கொண்டே எல்லாரையும் மன மகிழ்விப்பார் பிரியங்கா.

இதனாலே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். சுட்டி டிவி, சன் மியூசிக், சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் படிப்படியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று இந்த அளவுக்கு நட்சத்திர தொகுப்பாளினியாக உயர்ந்திருக்கிறார் பிஜே பிரியங்கா .

---- Advertisement ----

ஆரம்பத்தில் எதுவுமே கஷ்டப்படாமல் கிடைத்துவிடாது என்பதற்கு உதாரணமாக தனது உழைப்பின் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார்.

இவர் விஜய் தொலைக்காட்சிக்கு வந்த பிறகுதான் மிகப்பெரிய அளவில் இவரை ஃபேமஸ் ஆகியது குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகப்பெரிய அடையாளத்தையும் கொடுத்தது .

வாழ்க்கை கொடுத்த மாகாபா:

அதை எடுத்து மாகாபா உடன் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தனது நண்பரான மாகாபா ஆனந்தின் சிபாரிசின் பெயரில் தான் இவர் தொகுப்பாளினியாக விஜய் டிவியில் நுழைந்தார்.

இதனை இவரே பல பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். சினிமா காரம் காபி என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் பிரியங்கா.

பின்னர் அடுத்தடுத்து ஒன்லி பெல்லி, சூப்பர் சிங்கர் ஜூனியர் ,கலக்கப்போவது யாரு ,கிட்சன் சூப்பர் ஸ்டார், ஜோடி நம்பர் ஒன் ,சூப்பர் சிங்கர் 6 7 8 9 பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜய் டிவி நட்சத்திர தொகுப்பானியாக வளம் வந்தார்.

ஒரு கட்டத்தில் விஜய் டிவியின் பிரபல ஆங்கர் ஆக இருந்த பாவனாவையே அவர்கள் வேண்டாம் என ஒதுக்கிவிட்டு பிரியங்காவையும் முழு நேர தொகுப்பாளியாக போடும் அளவுக்கு இவர் டிஆர்பியை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தினார்.

அந்த அளவுக்கு விஜய் டிவியின் ராசியான தொகுப்பாளினியாக இவர் தனது இடத்தை ஆழமாக தக்க வைத்துக்கொண்டார்.

விஜய் டிவியின் ராசியான தொகுப்பாளினி:

காமெடியும் கலகலப்பான பேச்சும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமும் பிரியங்காவை பீட் செய்ய யாருமே கிடையாது என்ற அளவுக்கு அவர் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டினார்.

மேலும் நடன திறமை பாடும் திறமை பேசும் திறமை இப்படி அனைத்திலும் திறமை கொண்டவராக பார்க்கப்பட்டதால் பிரியங்காவுக்கு தனி மவுஸ் இருக்கிறது என்று கூறலாம்.

இதனிடையே அவர் தன்னுடன் பணியாற்றி வந்த பிரவீன்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

ஆனால் இவர்களது திருமணம் வாழ்க்கை சரியாக அமையாதால் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அம்மாவின் கோரிக்கை:

இதனால் அண்மையில் தனது அம்மாவுடன் பங்கேற்ற பேட்டி ஒன்றில் பிரியங்கா மிகவும் எமோஷனலாக இருந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பிரியங்காவின் அம்மா, ஏற்கனவே இவள் தன்னுடைய வாழ்க்கையில் செய்த தவறை இனிமேல் செய்யக்கூடாது.

அது அவரது சரியான தேர்வாக இல்லை. அதனால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை இதனால் நான் ரொம்பவே அவள நினைச்சு வருத்தப்பட்டு அழுது இருக்கேன்.

மருமணத்திற்கு தயார்:

இனிமேல் அப்படி நடக்கக்கூடாது அப்படின்னு நம்புறேன் என்று அவரது அம்மா கூற பிரியங்காவும் அதற்கு அழுதபடி தலையாட்டி சம்மதித்தார்.

இதன் மூலம் அவர் பிரவீனை விவாகரத்து செய்து விட்டதும் அவரது அம்மாவின் அறிவுறுத்தலின் பேரில் மறுமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாகவும் செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது அதை ஆணித்தரமாக உறுதிப்படுத்தும் வகையில் சீரியல் தயாரிப்பளார் ஒருவரை பிரியங்கா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top