சூதாட்ட விடுதியில் கவர்ச்சி நடனம் போடும் நமிதா..! - வைரலாகும் புகைப்படம்


நடிகர் விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா. வாட்டசாட்டமாகவும் அழகாகவும் இருந்த நமிதா-வுக்கு பட வாய்புகள் குவிந்தன.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவரது மார்க்கெட் எரிக்கொண்டே போனது. அதோடு அவரது உடல் எடையும் சேர்ந்தது ஏறியது. மேலும், விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 


தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நமிதா, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமீபகாலமாக திரைப்படங்களில் தலைகாட்டாத இவர், தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்ரியை சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டார்.


இந்நிலையில் இலங்கை கொழும்புவில் உள்ள பிரபல காசினோவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார் நமீதா. இதற்காக இலங்கை சென்றிருக்கும் நமீதா அதற்கான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.


Share it with your Friends