ப்ப்பா... என்னா அடி.. ! -லீக் ஆன மாஸ்டர் சண்டை காட்சிகள் - வாயை பிளக்கும் ரசிகர்கள்..! - வைரலாகும் வீடியோ..!


கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி நடிக்கின்றனர். 

இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் தயாரிக்கிறது. ஏப்ரலில் வெளியாகும் இந்த படத்தின் மூன்றாவது போஸ்டர் சமீபாதில் வெளியிடப்பட்டது. 

இத்திரைப்படத்தின் முதல் இரண்டு போஸ்டர்களிலும் விஜய் இடம்பெற்றிருந்த நிலையில், விஜய் சேதுபதியின் தோற்றத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். 

இந்நிலையில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஆக்ரோஷமாக விஜய்யும், விஜய் சேதுபதியும் ரத்தம் சொட்டும் முகத்துடன் வெறித்தனமாக மோதுவது போன்று இடம்பெற்றுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, மாஸ்டர் படப்பிடிப்புதளத்தில் எடுக்கபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. அடியாள் ஒருவரை நடிகர் விஜய் ஆக்ரோஷமாக பெரிய இரும்பு ராடால் தாக்குவது போன்ற காட்சி தான் அது.

இதனை பார்த்த ரசிகர்கள், ப்ப்பா... என்னா அடி.. ! என வாயை பிளந்து வருகிறார்கள். அதே சமயம், இப்படியான வீடியோக்களை யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Advertisement

Share it with your Friends