பட்டுப்புடவையில் கோட் சூட் - வித்தியாசமான உடையில் பூஜா ஹெக்டே..! - இதோ புகைப்படம்..!


மாடலாக இருந்து பின்னாளில் நடிகையாக மாறியவர் தான் இந்த பூஜா ஹெக்டே. தமிழில் இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ஜீவா நடித்து மிஷ்கின் இயக்கிய முகமூடி. 

இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது மட்டுமல்லாது இவருக்கும் அதே விமர்சனம் கிடைத்தது. இந்த படம் ஓரளவு பேசப்பட்டது.பின் இவர் தெலுங்கில் 'ஒக்க லைலாக்கோசம்' என்ற படத்தில் நாகா சைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார். 

இப்படம் இவருக்கு அங்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. இதன் பின் பாலிவுட் பக்கம் சென்ற பூஜா ஹெக்டே முகஞ்சதாரோ என்ற படத்தில் பாலிவுட் ஸ்டார் ஹரிதிக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார். 

அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தாலும், படம் சரியாக ஓடவில்லை. இதனால், மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பினார். இங்கு பல படங்களில் நடித்து விட்ட மார்கெட்டை பிடிக்க போராடினார். ஜீனியர் என்.டி.ஆர் மற்றும் மகேஷ் பாபு என்று உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தார்.


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் அடிக்கடி வித்தியாசமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். அந்த வகையில், தற்போது பட்டு புடவையில் கோட் சூட் தைத்து போட்டது போல ஒரு உடையை அணிந்துகொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பட்டுப்புடவையில் கோட் சூட் - வித்தியாசமான உடையில் பூஜா ஹெக்டே..! - இதோ புகைப்படம்..! பட்டுப்புடவையில் கோட் சூட் - வித்தியாசமான உடையில் பூஜா ஹெக்டே..! - இதோ புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 02, 2020 Rating: 5
Powered by Blogger.