ஊரடங்கை மீறி ஆண் நண்பருடன் காரில் சென்று விபத்துக்குள்ளான பிரபல நடிகை..! - அதிர்ச்சி தகவல்..!


நாடு முழுதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் நண்பருடன் காரில் சென்ற பிரபல நடிகை படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நடிகை ஷர்மிளா மந்த்ரே. கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் தனது ஆண் நண்பர் லோகேஷ் வசந்த் என்பவருடன் ஜாக்குவார் காரில் சென்றுகொண்டிருந்தார். 

பெங்களூரு ஹைகிரண்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட வசந்த் நகர் என்ற இடத்தில் கார் வந்தபோது, பாலம் ஒன்றில் திடீரென்று கார் மோதியது.

இந்த விபத்து காரணமாக காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. காரின் முன் புற இருக்கையில் அமர்ந்து பயணித்த நடிகை ஷர்மிளா, படுகாயமடைந்தார். அவரது முகத்திலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. 

அவரது ஆண் நண்பரும் காயமடைந்தார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அருகிள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவர். தமிழில் மிரட்டல் என்ற படத்தில் நடித்துள்ள இவர், நடிகர் விமல் நடித்த இவனுக்குஎங்கயோ மச்சம் இருக்கும் என்ற படத்தை தயாரித்தார். இப்போது, விமல் நடிக்கும் சண்டக்காரி படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கை மீறி ஆண் நண்பருடன் காரில் சென்று விபத்துக்குள்ளான பிரபல நடிகை..! - அதிர்ச்சி தகவல்..! ஊரடங்கை மீறி ஆண் நண்பருடன் காரில் சென்று விபத்துக்குள்ளான பிரபல நடிகை..! - அதிர்ச்சி தகவல்..! Reviewed by Tamizhakam on April 04, 2020 Rating: 5
Powered by Blogger.