உன் மகள் தான் ஹீரோயின் - ஆனால், இதை பண்ணனும் என என் அம்மாவிடமே கேட்டார்கள் - பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!


ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் சிறுமியாக நடித்தவர் கல்யாணி என்கிற பூர்ணிதா. குழந்தை பருவம் முதலே டிவி சீரியல்கள் மற்றும் பல்வேறு டீவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

சமீபத்தில்,கத்தி கப்பல், இன்பா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். திடீரென்று சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.திருமணம் செய்துகொண்டு செட்டிலாகவிட்டார்.

திருமணம் ஆகி விட்டதால் தான் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார் என்று பலரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அதற்க்கான காரணத்தை கல்யாணி கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், ' நான் சினிமாவில் இருந்து விலகியதற்குக் காரணம் என்னைத் தவறாகச் சிலர் பயன்படுத்தப் பார்த்தார்கள். என் அம்மாவிற்கு போன் செய்து பெரிய ஹீரோ, பெரிய ப்ரொட்யூசர் உங்கள் மகள் தான் ஹீரோயின். ஆனால், படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்றால் அட்ஜெஸ்ட் மென்ட் அதாவது படுக்கைக்கு வரவேண்டும் என்று சில இயக்குனர்கள் கேட்டனர்.

இதனால், என் அம்மா நடிப்பே வேண்டாம் என்று கூறி விட்டார். அதனால்தான் நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஒரு டிவி சேனலில் இதுபோல் சம்பவம் நடந்தது. பிரபல தொலைகாட்சியில் சில நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.

அப்போது, அந்த நிகழ்ச்சியின் மேனேஜர் என்னிடம் ஒரு நாள் இரவு நேர பார்ட்டிக்கு வருமாறு கேட்டார். எனக்கு எதுவுமே புரியவில்லை, வேண்டும் என்றால் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு காஃபி ஷாப்பில் சந்திக்களாமே என்று கூறினேன்.

அவ்வளவு தான் அன்று முதல் என்னை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை தொகுப்பாளினியாக போட்டு விட்டார். மேலும், என்னை மீண்டும் அந்த சேனல் பக்கமே அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கல்யாணி இதுபோல் மீ டூ புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உன் மகள் தான் ஹீரோயின் - ஆனால், இதை பண்ணனும் என என் அம்மாவிடமே கேட்டார்கள் - பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..! உன் மகள் தான் ஹீரோயின் - ஆனால், இதை பண்ணனும் என என் அம்மாவிடமே கேட்டார்கள் - பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..! Reviewed by Tamizhakam on May 27, 2020 Rating: 5
Powered by Blogger.