முன்னாள் காதலர்களுடன் இணையும் நயன்தாரா..? - கலக்கத்தில் விக்னேஷ் சிவன்..!


சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்படியெல்லாம் இல்லை விக்னேஷ் சிவன் கூறிவிட்டார் என தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், பிரபுதேவா இல்லை, நடிகர் சிம்புவுடன் மீண்டும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்கப் போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

இந்த செய்தி தான் தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்-காக போய்க்கொண்டிருகின்றது. சிம்பு நயன்தாரா நடிப்பில் உருவான வல்லவன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் போது இருவரும் அப்படி இப்படி ஒரு மாதிரியாக காதலர்களாக மாறினர். அதன் பிறகு பிரேக்கப் பண்ணிவிட்டு பிரபுதேவாவுடன் இணக்கமானார் நயன்தாரா.

சிம்புவும் சிலகாலம் சோர்ந்துபோய் இருந்து விட்டு கொளுக்கு மொழுக்கு நடிகை ஹன்சிகா பக்கம் தாவினார். பிறகு, மீண்டும் சிம்பு நயன்தாரா இணைந்து இது நம்ம ஆளு எனும் படத்தில் நடித்து இருந்தனர். மீண்டும் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு விட்டதாக வதந்திகள் கிளம்பின.

ஆனால், பிரபுதேவாவையும் பிரிந்தார் நயன்தாரா.பிறகு, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஊர் சுற்றி வந்தார். சமீபத்தில் பிரபுதேவா படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்ற செய்தியைத் தொடர்ந்து மீண்டும் சிம்புவுடன் நயன்தாரா என இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மிஸ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு நயன்தாராவை கதாநாயகியாக மிஸ்கின் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு நயன்தாரா மறுப்பு தெரிவித்ததாகவும், மேலும் மிஸ்கினின் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தின் கதையையும் நிராகரித்து விட்டதாக அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியது.

தொடர்ந்து நயன்தாராவின் முன்னாள் காதலர்கள் மீண்டும் அவரை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளதால் சற்று கலக்கத்தில் தான் இருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

முன்னாள் காதலர்களுடன் இணையும் நயன்தாரா..? - கலக்கத்தில் விக்னேஷ் சிவன்..! முன்னாள் காதலர்களுடன் இணையும் நயன்தாரா..? - கலக்கத்தில் விக்னேஷ் சிவன்..! Reviewed by Tamizhakam on June 16, 2020 Rating: 5
Powered by Blogger.