இன்றைய ராசிபலன் 03 ஏப்ரல் 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 03 ஏப்ரல் 2023 திங்கட்கிழமை.இன்று என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளவும் நாளை எது நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும் ஜோதிடத்தை தவிர வேறு மார்க்கம் எதுவுமே இல்லை என்று கூறலாம்.

அப்படிப்பட்ட ஜோதிட கலையானது ஜாதகத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டும் அதில் இருக்கும் கிரகங்களின் பார்வையை பொறுத்து அவர்களின் நன்மை தீமைகளை கணித்துக் கூறுவார்கள். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே என்று உங்களுக்கு அதிக அளவு உணர்ச்சிகள் மேலோங்கும். இந்த உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் நீங்கள் கட்டுப்படுத்தினால் உங்களுக்கு நல்லது நடக்கும்.மேலும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய இருப்பதால் நீங்கள் உங்கள் சமநிலையை இழக்க நேரலாம். எனவே எதிலும் நம்பிக்கையோடும் பொறுமையோடும் நீங்கள் இருப்பதினால் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரித்து கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அதிகளவு பணிகள் உங்களுக்கு இருக்கும். திறமையோடும் கவனத்தோடும் பணிகளை சிறப்பான முறையில் செய்ய சில விஷயங்களை நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைந்த அளவே உள்ளது. தேவையற்ற செலவுகளை நீங்கள் செய்வதால் அது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தித் தரும்.

--Advertisement--

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தூக்கமின்மை காரணமாக முதுகு வலி ஏற்படலாம் எனவே நீங்கள் தூங்க வேண்டியது அவசியம்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று மகிழ்ச்சிகரமான நாள் இல்லை. உங்களுக்கு சங்கடமான சூழ்நிலைகள் ஏற்படும்.எனவே வளைந்து கொடுத்து போவதின் மூலமே நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் எல்லோரையும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலை உள்ளதால் நீங்கள் உங்கள் பணிகளை திட்டமிட்டு நடத்த வேண்டும். அப்போதுதான் பணிகளை சிறப்பாக முடிக்க முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வளர்ச்சி திருப்திகரமாக இல்லை. எனவே பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் கண்ணும் கருத்துமாக பண விஷயத்தில் இருக்க வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று ஆரோக்கியம் குன்றி உங்களுக்கு இருக்கும். இன்று தலைவலி, முதுகு வலி ஏற்படலாம். தியானத்தின் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கக் கூடிய நாள். உங்கள் இலக்குகளை எளிதாக அடையலாம். தன்னம்பிக்கையோடு இருங்கள். நிச்சயம் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் இன்று நிறைவேற்றிக் கொள்ளலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் உங்கள் தனித்திறமை வெளிப்படும். உங்கள் செயல் திறனை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். மேல் அதிகாரிகளில் ஆதரவு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் அதிக அளவு உள்ளதால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உங்களுக்கு பண வரவு வந்து சேரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த குறைபாடும் இல்லை. இன்று முழு ஆரோக்கியத்தோடு நீங்கள் இருப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று பொறுமை மற்றும் மன உறுதியை நீங்கள் வளர்த்துக் கொள்வது அவசியமாகும். உங்களுடைய அணுகுமுறையில் நிதானம் தேவை. உங்கள் செயல்களை நீங்கள் திட்டமிட்டு செயல்படுத்துவதின் மூலம் வெற்றி இலக்குகளை எளிதாக அடையலாம்.

இன்று பணிகள் அதிகளவு காணப்படும். சக பணியாளர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது. உணர்ச்சிவசப்படாமல் உங்கள் பணியை குறித்த நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் சீராக இல்லை. தேவையற்ற செலவுகள் அதிகரித்து காணப்படும். இதனால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை சுமாராகவே இருப்பதால் நீங்கள் உங்கள் ஆற்றல் குறைந்து இருப்பீர்கள். தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. எனவே ஓய்வெடுப்பது மிகவும் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே என்று மிதமான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் அதிகரித்து இருப்பதால் அதற்கு நேரத்தை செலவிட சரியாக இருக்கும். மனதில் குழப்பங்கள் அதிகரித்து காணப்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அதிகளவு பணிகள் இருக்கும். நன்மையான பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை கூடுதல் செலவுகள் ஏற்படும். எனினும் உங்கள் சேமிப்பு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இன்று உள்ளது.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண் எரிச்சல் ஏற்படலாம். கண்களை வருத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உற்சாகமான மனநிலையை நீங்கள் பராமரிப்பதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று எதிர்பார்த்த பலன்கள் எதுவுமே கிடைக்காது. தீய பலன்கள் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் ஆழ்ந்து யோசித்து எதிலும் செயல்பட வேண்டும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனத்தை காட்டுங்கள். இல்லை என்றால் அது ஒரு மிகப்பெரிய பிரச்சனையை உங்களுக்கு ஏற்படுத்தி விடும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் பணிகளை திறமையாக முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால் உங்களுக்கு ஏமாற்றம் கிட்டும். தடைகள் அதிகளவு உள்ளதால் உங்கள் பணியை எளிதில் முடிக்க முடியாது. சக பணியாளர்களோடு நீங்கள் ஒத்துப் போக மாட்டீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் இன்று ஏற்படும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி சிக்கனமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் பணத்தேவையை முழுமையாக நீங்கள் பராமரிக்க முடியும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று அவ்வளவு சிறப்பான நாள் இல்லை. செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். அதிகளவு தண்ணீரை குடியுங்கள் மிதமான உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்கள் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். உறுதியோடு நீங்கள் செயல்படுவதின் மூலம் வெற்று இலக்குகளை எளிதில் அடையலாம். உங்கள் நம்பிக்கை உணர்வு உங்களை உச்சத்துக்கு கண்டிப்பாக அழைத்துச் செல்லும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் முன்னேற்றம் உண்டு. உங்கள் வளர்ச்சியை பார்த்து அனைவரும் வியப்பார்கள். புதிய, புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை அதிர்ஷ்டகரமான நாள் என்று கூறலாம். உங்கள் கையில் இருக்கும் உபரி பணத்தைக் கொண்டு நீண்ட கால திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணம் பல வழிகளில் வந்து சேரும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று மனதில் திருப்தி இருப்பதின் காரணமாக உங்கள் ஆரோக்கியம் அதிகரித்து இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று நீங்கள் உங்கள் மனம் மகிழும் படி பல நிகழ்வுகள் நடக்கும். உங்கள் குழந்தையை பற்றி பெருமையாக நினைப்பீர்கள். எடுக்கும் முக்கிய முடிவுகளை என்று தாராளமாக எடுக்கலாம். அதன் மூலம் நன்மை கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை புதிய வாய்ப்புகள் வந்து சேரும். இது உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும். பணியாற்றுவதை எளிதாக நீங்கள் உணர்வீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள். பண பற்றாக்குறை இருக்காது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று மேம்பட்டுதான் ஆரோக்கியம் இருக்கும். எனவே சிறப்பான ஆரோக்கியத்தை பெற்றிருக்கக் கூடிய நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே என்று உங்களுக்கு எதிர்பாராத நிச்சயமற்ற பலன்கள் ஏற்படும். இந்த பலனில் நன்மை, தீமை என இரண்டும் கலந்து இருக்கும். சவால்களை சந்திக்க வேண்டி இருப்பதால் எதையும் பொறுமையுடன் செய்ய வேண்டும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கவனக்குறைவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இதன் மூலம் உங்கள் பணிகள் தவறுகள் நடக்கலாம் .திறமையுடன் செயலாற்றும்போதும் நீங்கள் கவனத்தோடு இருப்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை என்று கூடுதல் செலவுகள் காணப்படும். எதிர்கால பாதுகாப்பு கருதி பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று உங்களுக்கு மேலோங்கும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சுமாரான நாள் என்று கூறலாம். சத்தான உணவை உட்கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும். அமைதியோடு இருக்க முயற்சி செய்யுங்கள். சோர்வாக இருக்கும் நீங்கள் ஓய்வெடுப்பது சிறப்பாக இருக்கும்.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று நீங்கள் அதிகமாக சிந்தித்து செயல்படுவீர்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொண்டால் வெற்றி கிடைக்கும். அமைதியாக இருக்க வேண்டி இருப்பதால் நீங்கள் தியானத்தை மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி நிமித்தமாக பல பக்கங்களுக்கு பயணம் செல்ல வேண்டி இருக்கும். அதிக பணிகள் இருப்பதால் அது உங்களுக்கு சவாலான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும். சோர்வோடு இருந்தாலும் நீங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிடுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று சாதகமாக இல்லை. தொலைதூரத்தில் நிலுவையில் இருக்கும் பணங்கள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்படும். எனவே கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் மிதமான உணவை நீங்கள் எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே ஆரோகத்தில் கவனத்தை செலுத்தவும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, இன்று உங்கள் இலக்குகளை அடைய சிறந்த நாள் என்று கூறலாம். எளிதாக நீங்கள் உங்கள் இலக்குகளை இன்று அடைந்து விடுவீர்கள். அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும்.அப்படி இருந்தாலும் இந்த பயணத்தின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்கள் திறமைகள் பளிச்சென்று வெளிப்படும். இது உங்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவையும், பாராட்டுதல்களையும் பெற்று தரும். எனவே இன்று உற்சாகமான மனநிலையில் நீங்கள் பணியாற்றுவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை மகிழ்ச்சிகரமான நாள் என்று கூறலாம். உங்கள் கடினமான உழைப்புக்கு கூடுதல் பணங்கள், ஊக்கத்தொகைகள் என பல பக்கங்களில் இருந்தும் உங்களுக்கு பணவரவு ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சுறுசுறுப்பாகவும், ஆற்றலோடும் இருப்பீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியத்தில் சுணக்கம் ஏற்படாது.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்றைய நாள் சுறுசுறுப்பாக நீங்கள் செயல்படுவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைய முடியும். உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் தாராளமாக கிட்டும். மகிழ்ச்சியும், உற்சாகமும் கலந்த நாளாக இந்த நாள் உங்களுக்கு அமையும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்களின் ஆதரவும், உதவியும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் திறமையை நிரூபிக்கும் விதத்தில் செயல்படுவீர்கள்.உங்கள் செயல் திறன் அதிகரித்து உங்கள் பணிகளை உரிய நேரத்தில் முடித்து விடுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை போதுமான பணப்புழக்கம் இருக்கும். உங்களிடம் இருக்கும் உபரிப் பணத்தை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துவீர்கள்.

 ஆரோக்கியமும் நலமாக இருக்கும். எந்த விதமான ஆரோக்கிய சீர்கேடும் ஏற்படாது. எனவே நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.