இன்றைய ராசிபலன் 06 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 06 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை.வாழ்க்கையில் எண்ணற்ற நன்மைகள் ஏற்பட வேண்டும் என்றால் அதற்காக நீங்கள் உங்கள் ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கு உரிய  பலன்களை அறிந்து கொண்டு செயல்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய நாளை கையாளுவது மிகவும் எளிது.மேலும் இது கடினமான நாளல்ல.உங்கள் வளர்ச்சியை குறித்து நீங்கள் சுதந்திரமான முடிவுகளை எடுக்கலாம். உறுதியான மனநிலையில் இருப்பதால் உங்களுக்கு தொட்ட காரியத்தில் எல்லாம் வெற்றி வந்து சேரும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் சிறந்த நிலையில் இருப்பீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டு உங்களுக்கு கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிக அளவு காணப்படும். அதிர்ஷ்டம் உள்ளதால் இன்று பணத்தை நீங்கள் சேமிப்பீர்கள்.

--Advertisement--

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆற்றல் அதிகரித்து இருப்பதால் என்று உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எனவே ஆரோகத்தைப் பற்றி அச்சப்பட வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று உங்கள் வளர்ச்சியில் தடைகள் ஏற்படும். எனினும் உறுதியோடும், கவனத்தோடும் நீங்கள் செயல்பட்டால் அந்த தடைகளை தகர்த்து எரிந்து முன்னேற்றம் அடைவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை வேலை தொடர்பாக நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்த பயணம் உங்களுக்கு கடினமாக இருந்து உங்களை அலைகளிக்க கூடிய சூழ்நிலையை கொடுக்கும். எனவே நீங்கள் கவனமாக இருக்கவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வரவும், செலவும் இணைந்து இருப்பதால் உங்களுக்கு அதிக அளவு செலவுகள் ஏற்படும். நீங்கள் கட்டாயம் சேமிக்க முடியாது. எனவே நிதியை நீங்கள் சரியான வழியில் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் உங்களுக்கு இதன் மூலம் ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமான ஒன்றாகும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று உங்கள் செயல்களில் கவனமாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள். தன்னம்பிக்கையோடு இருங்கள். மகிழ்ச்சியோடு எதையும் செய்யுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் அமைதியான சூழ்நிலை இல்லை. சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்களை புறக்கணிக்க கூடிய சூழ்நிலை நிலவுகிறது. எனவே அதை உணர்ந்து உங்கள் பணிக்கு உரிய அங்கீகாரத்தை நீங்கள் கொடுத்து பணியாற்றுவது அவசியமாகும்.

 நிதி நிலையை பொறுத்த வரை பணப்புழக்கம் குறைவாக இருக்கும். தேவையற்ற செலவுகள் வந்து சேரும். சேமிக்க இயலாத சூழ்நிலையில் கையில் இருக்கும் கையிருப்பு அனைத்தும் கரைந்து போகும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி ஏற்படும். தோல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளால் பாதிப்புகள் வரலாம். எண்ணெய் பதார்த்தங்களை அதிகளவு உண்ண வேண்டாம். உணவில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் அவசியம்.

கடகம்

கடக ராசி நேயர்களில் இன்றைய நாள் உங்களுடைய இலக்குகளை எளிதாக அடைய நீங்கள் முயற்சி எடுக்க கூடிய நாளாக இருக்கும். உங்கள் செயல்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். உறுதி மற்றும் தைரியத்தின் மூலம் நீங்கள் வெற்றி மேல் வெற்றியை குவிக்கலாம். தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் நன்மைகள் ஏற்படும். உங்கள் செயல் திறன் அதிகரித்து திருப்தியை உங்களுக்கு ஏற்படுத்தித் தரும். மன மகிழ்ச்சியின் காரணமாக பணிகளை எளிதில் முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை ஸ்திரமான நிதிநிலைமை என்று இருக்கும். உங்கள் பணத்தை நல்ல வழியில் சேமிக்க திட்டமிடுவீர்கள். எனவே சேமிப்பு அதிக அளவு உயரும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாள் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான கோளாறுகளும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசியின் நண்பர்களே இன்று உங்களுக்கு கடினமான சூழ்நிலைகள் உள்ளதால் அவற்றை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டிய நாளாக உள்ளது. கோபம் மற்றும் பதட்டத்திற்கு அதிக அளவில் ஆளாவீர்கள். அமைதி, நம்பிக்கையை நீங்கள் கடைப்பிடிப்பது அவசியம் ஆகும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் சௌவுரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு இல்லை. எனவே நீங்கள் பணியில் கவனத்தை செலுத்துவது அவசியம்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும். தேவையற்ற செலவுகளால் உங்களுக்கு கவலை ஏற்படும். எளிதில் உங்கள் பணத்தை சேமிக்க இயலாது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை அசௌகரிமான நாள் என்று கூறலாம். இன்று தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு தூக்கம் இன்மையும் காணப்படும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று நீங்கள் சௌரியங்களை பலருக்கு விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும். உங்கள் மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கடுமையான போராட்டங்களை நீங்கள் சந்திப்பீர்கள். எனினும் அவற்றை சமாளித்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் உங்களிடையே மேலோங்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. திட்டமிட்டு பணியாற்றுவதின் மூலம் தவறுகளை நீங்கள் சரி செய்துவிடலாம். சக பணியாளர்களுடன் தவறான புரிதல் ஏற்படும். எனவே பணியில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

 நிதி நிலைமை பொறுத்த வரை பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இல்லை. பணத்தை கவனமாக கையாள வேண்டும். கூடியவரை கையிருப்பு குறையாமல் இருக்க சிக்கனமாக பணத்தை செலவு செய்வது அவசியமாகும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று கண்கள் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கண் மருத்துவரை சந்திக்க நேரிடலாம். அவ்வாறு நேரிட்டால் உங்கள் கண்ணுக்கு உரிய சிகிச்சையை நீங்கள் மேற்கொள்வது நல்லது.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்கள் வளர்ச்சிகள் தடைகள் ஏற்படும். நீங்கள் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கையோடு, விடாமுயற்சியும் அவசியமான ஒன்றாகும். எல்லாவற்றையும் சமாளிக்க கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் தவறுகள் நேர வாய்ப்புகள் அதிகளவு உள்ளதால் உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்வதின் மூலம் அவற்றிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். தொழிலில் கவனம் அவசியம் தேவை.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பயணத்தின் போது பண இழப்புகள் அதிக அளவு நேரிடும். எனவே பணத்தை கவனமாக கையாளுங்கள். சேமிப்பு ஏதும் இன்று செய்ய முடியாது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பான நாளல்ல. பதட்டம் அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்தில் சின்ன, சின்ன குறைகள் ஏற்படும். எனவே நீங்கள் கண்ணும் கருத்துமாக ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று வெற்றிகரமான நாளாக உங்களுக்கு அமைந்துள்ளதால் உங்கள் இலக்குகளை நீங்கள் எளிதில் அடைந்து வெற்றி பெற நீங்கள் முயற்சி செய்தாலே போதும். இன்று ஓய்வின்றி செயலாற்றக்கூடிய நீங்கள் எல்லா செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க இன்று உகந்த நாள் என்று கூறலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் அங்கீகாரம் உங்களுக்கு அதிக அளவு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை என்று வங்கிகளில் பணம் போட்டு இருந்தால் அந்த பணம் உங்களுக்கு இரட்டிப்பாகும். புதிய முதலீடுகளில் நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களிடம் தைரியம் அதிகமாக இருப்பதின் காரணத்தால் ஆரோக்கியத்தில் எந்த விதமான குறையும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சம் வேண்டாம்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று உங்கள் திட்டங்கள் நல்ல முறையில் ஈடேறி அதற்கு உரிய பலன்கள் சிறப்பான முறையில் உங்களுக்கு கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பதன் மூலம் நல்ல நல்ல பலன்களை பார்க்கலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடச் சூழல் சிறந்த முறையில் உள்ளது. உங்கள் செயலாற்றல் அதிகரிக்கும். மேலும் பணியில் திருப்தி கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று சாதகமான நாளாக உங்களுக்கு உள்ளது. உங்கள் சேமிப்பு உயரும். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பான நாள் என்று கூறலாம். குடும்பம் அமைதியோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க கூடிய சூழல் இருப்பதால் நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிக அளவு உள்ளது. எனவே சிறப்பான திட்டமிடுதல் மூலம் நீங்கள் அவற்றை சரி செய்ய முடியும். புதிய யுத்திகளை கையாண்டு வெற்றிகளை பெறுவீர்கள்.  அமைதியாக இருப்பதின் மூலம் நன்மை ஏற்படும். எனவே பதட்டப்பட வேண்டாம்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்கக்கூடிய ஆற்றல் ஏற்படும். எனினும் பணியில் தவறுகள் நடக்காமல் இருக்க முன் ஜாக்கிரதியாக செயல்படுவது அவசியமானதாகும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை சிறப்பான நாள் இல்லை என்றாலும் பூர்வீக சொத்து எதிர்பாராத வகையில் வந்து சேரும். மேலும் சில இடங்களில் இருந்து வராது என்று நினைத்த பணங்கள் இன்று வந்து சேரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பெரிய அளவில் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை. வேலைப்பளு காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் சற்று கவனத்தோடு இருந்தாலே போதும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்படும். நம்பிக்கை இருந்தால் நீங்கள் நன்மை பெற முடியும்.இனி கூடுதல் சுமைகள் எதையும் நீங்கள் ஏற்றுக்கொள்வது உங்களுக்கு உகந்தது அல்ல.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளில் தவறுகள் நேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பணியாற்றும் இடத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட திட்டமிட்டு எந்த பணியையும் செய்யுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்றே மகத்துவமான நாள் இல்லை. பண இழப்பின் காரணமாக உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படும். எனவே சிக்கனமாக உங்கள் பணத்தை செலவு செய்ய முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியமும் இன்று அவ்வளவு சிறப்பாக இல்லை. உங்களுக்கு கை கால்களில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தை பேணக்கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று நீங்கள் அதிகப்பணியில் மூழ்கி இருப்பீர்கள். புதிதாக ஒன்றை அடைவதில் உறுதியாக இருப்பீர்கள். கடினமாக உழைப்பதன் மூலம் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை சிறந்த செயல் திறன் காரணமாக உங்களுக்கு பணியில் நல்ல பெயர் கிடைக்கும். உங்கள் வேலைத் தரம் பார்த்து உங்களது திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். பணி சம்பந்தமான சந்திப்பில் கலந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களை தெளிவாக கூறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கடின உழைப்பின் மூலம் ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள், பணவரவு உங்களுக்கு அதிகரித்து காணப்படுவதால் நீங்கள் உற்சாகத்தோடு இருப்பீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்கள் மனநிலை இன்று சிறப்பாக இருப்பதால் உங்கள் ஆரோக்கியமும் மிக நல்ல முறையில் இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.