Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ராசிபலன்

இன்றைய ராசிபலன் 11 ஏப்ரல் 2023 செவ்வாய்கிழமை – Today Rasi Palan in Tamil

இன்றைய ராசிபலன் 11 ஏப்ரல் 2023 செவ்வாய்கிழமை. நேற்று, இன்று, நாளை என மூன்று காலங்களையும் மிகச் சிறப்பான முறையில் கனித்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஜோதிடக் கலை பலவிதமான நன்மைகளை மனிதர்களுக்கு அள்ளித் தருகிறது. இதில் கூறப்பட்டிருக்கும் வழிபாடு முறைகளையும் பரிகாரங்களையும் பின்பற்றுவதன் மூலம் நமக்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்று நீங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவது அவசியம். எந்த ஒரு இடத்திலும் நீங்கள் பொறுமை மற்றும் அமைதியை மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு நன்மையை கிடைக்கும். இன்று காரியங்களை சமாளிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டாலும் பொறுமையை கடைப்பிடியுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பிறருடன் பழகும் போது பொறுமையோடும், அமைதியோடும் நடந்து கொண்டால் உங்களுக்கு நன்மதிப்பு ஏற்படும். தொழிலில் கவனத்தை செலுத்துவது நல்லது.

 நிதிநிலைமையை பொறுத்தவரை  இன்று பணப்புழக்கம் சிறப்பாக இல்லை. எனினும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எதிர்பாராத பண வரவு உங்களுக்கு வந்து சேர்வதால் அந்த செலவுகளை நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று ஆரோக்கியத்துக்காக பண செலவு செய்ய வேண்டி இருக்கும். தொண்டை வலி ஏற்படாமல் இருக்க குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து விடுங்கள். கண்களுக்கு உரிய சிகிச்சையை கொடுப்பதும் மிகவும் முக்கியம்.

--Advertisement--

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று உங்களிடம் அதிக அளவு ஆர்வம் காணப்படும். அதை கொண்டு உங்கள் செயல்களை விரைவாக முடித்து விடுவீர்கள். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் நல்ல பலனைத் தரும். எனவே இன்று முடிவுகள் எடுக்க உகந்த நாள் என கூறலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்களுடைய காணப்படக்கூடிய சிறப்பு தகுதி பளிச்சென்று வெளிப்படும். உங்கள் பணிக்கான அங்கீகாரம் விரைவில் கிடைக்கும்.

 நிதி நிலைமை பொறுத்த வரை முன்னேற்றகரமான நாள் எனக் கூறலாம்.மேலும் வங்கியில் நீங்கள் உங்கள் சேமிப்பை உயர்த்த முயற்சி செய்வீர்கள். இதனால் மகிழ்ச்சி ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று ஆற்றலோடும் உற்சாகத்தோடும் நிறைந்திருக்கும் நீங்கள் ஆரோக்கியத்தோடும் இருப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பலன்கள் ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். எனவே அமைதியாகவும், கவனமாகவும், செயலாற்றுவது இன்றியமையாதது. இதுவே உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மந்திரம் எனக் கூறலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளுக்கு முன் உரிமை கொடுக்கப் பழகிக் கொள்ளுங்கள். திட்டமிட்டு உங்கள் பணிகளை செய்வதின் மூலம் மிக விரைவில் உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிகமாக காணப்படும். அதற்கு ஏற்ப செலவுகளும் இருக்கும் என்பதால் உங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பதட்டம் இல்லாமல் இருப்பது மிகவும் அவசியம். பதட்டத்தின் காரணமாக உங்கள் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன சீர்கேடுகள் ஏற்படலாம்.

கடகம்

கடக ராசி நண்பர்களே என்று நம்பிக்கையோடும், அமைதியோடும் நீங்கள் இருக்க வேண்டும். இதனால் எல்லா பிரச்சனைகளையும் உங்களால் எளிதில் சமாளிக்க முடியும். உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதின் மூலம் நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை இன்று பணிகள் அதிகமாக இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள். பணிகளுக்கு முன் உரிமை கொடுத்து பணி புரியுங்கள். நேரத்தோடு நீங்கள் பணியை முடிப்பது அவசியமாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கூடுதல் பொறுப்புகள் காரணமாக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும், என்றாலும் உங்கள் தேவைகளை சமாளிக்கும் அளவு உங்களிடம் பணப்புழக்கம் இருக்கும். எனவே நிதி நிலைமையை பற்றி அச்சம் வேண்டாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சில சௌரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டி இருப்பதால் நீங்கள் பதட்டப்படாமல் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சிம்மராசி நேயர்களே இன்று நேர்மறையான எண்ணம் மற்றும் நட்பு முறையில் நீங்கள் பிறரை அணுகுவதின் மூலம் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். உங்களுக்கு வெற்றியும், நன்மதிப்பும் கிடைக்கக்கூடிய நாளாக இந்த நாள் விளங்க வேண்டும் எனில் நீங்கள் உங்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் கவனம் செலுத்துவது அவசியம்.நீங்கள் கவனமின்றி செயல்பட்டால் பணி செய்யக்கூடிய இடத்தில் உங்களுக்கு மதிப்பிழப்பு ஏற்படும். எனவே கண்ணும் கருத்துமாக பணி செய்யவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சற்று மந்தமான நாள் என்று கூறலாம்.இன்று உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நிதியின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தொண்டை வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் வெந்நீரை பருகவும்.மேலும் குளிர்ந்த உணவுகளை சாப்பிட வேண்டாம் கவனத்தோடு இருந்தால் நோய் வராமல் தடுக்கலாம்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்று மிகுந்த ஆற்றலோடு நீங்கள் இருப்பீர்கள்.உங்களுக்கு பயனுள்ள செயல்பாடுகளின் மூலம் நன்மைகள் அதிகம் கிடைக்கும். சௌவுரியமான நாளாக இந்த நாள் உங்களுக்கு விளங்குகிறது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று தரமாக உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள். உங்களிடம் மறைந்திருக்கும் அற்புத ஆற்றல் வெளிப்பட்டு அனைவரும் உங்களை பாராட்டும் விதத்தில் உங்கள் தொழில் அமையும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நீங்கள் கடன் பெற்று உங்கள் பண தேவைகளை சமாளிப்பீர்கள். உங்களுடைய சேமிக்கும் ஆற்றல் உயரும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று திடமாகவும், திறமாகவும் இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான குளறுபடிகளும் இல்லை. எனவே ஆரோக்கியமான நாள் என்று கூறலாம்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று மிகவும் சிறப்பான நாளாக உங்களுக்கு அமைந்துள்ளது. உங்கள் பேச்சில் தெளிவு காணப்படும்.நீங்கள் பேச்சாற்றல் மூலம் அனைத்தையும் சாதித்து விடுவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை குழப்பம் காரணமாக உங்கள் பணியில் சுணக்கம் ஏற்படும். எனவே பணியில் கவனத்தை செலுத்துவது மிகவும் இன்றியமையாதது. சக பணியாளர்களுடன் பொறுமையாக பழகவும். பணியை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிட்டு செய்யுங்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். செலவுகளை நிர்வகிக்க நீங்கள் படித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதிக செலவுகள் ஏற்படும். இன்று சிக்கனத்தை கையாளுவது அவசியம்.

 உடல் நிலையை பொறுத்தவரை தாயாரின் உடல்நலத்திற்காக பணத்தை செலவு செய்ய நேரிடும். எனவே அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்திலும் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்று நீங்கள் சிறப்பாக யோசித்து செயல்பட வேண்டியது கட்டாயமாகும். நீங்கள் தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். இதன் மூலம் உங்களுக்கு மன்கவலை ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் இன்று கூடுதல் பொறுப்புகள் காணப்படும். உங்களை நீங்கள் உற்சாகப்படுத்திக் கொள்வதின் மூலம் வெற்றியடைய முடியும். அமைதியாக எதையும் செய்ய வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் சீராக இல்லை. எனினும் இருக்கும் பணத்தைக் கொண்டு நீங்கள் இன்றைய தினத்தை சமாளித்து விடலாம். பணத்தை சேமிப்பது மிகவும் அவசியமாகும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உணர்ச்சி வசப்படுதலும், பாதுகாப்பாற்ற உணர்வையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். இது உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று சில தடைகளை ஆரம்பத்தில் நீங்கள் சந்திக்க நேரிடும். எனினும் தைரியத்தோடு நீங்கள் அதை எதிர் கொண்டு சமாளிப்பீர்கள். உங்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புத் தன்மை காரணமாக உங்களுக்கு நன்மை ஏற்படும். எதிலும் நம்பிக்கையோடு செயல்படுவது மிகவும் நல்லது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கவனமாக பணியாற்றுங்கள்.மேலும் தேவையற்ற சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நீங்கள் பணிகளை சிறப்பாக செயல் புரிய கட்டாயம்  கவனத்தோடு இருப்பது அவசியம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அதிக பணம் இன்று உங்கள் கைகளில் புரலாது. எனவே பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை முன் எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் நல்லது. கண் மற்றும் பல் சம்பந்தமான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே என்று அனைத்தும் சிறப்பாக நடக்கக்கூடிய நாள் உங்கள் வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். மேலும் எதிர்பாராத விதமாக உங்களுக்கு பணவரவு அதிகரிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பீர்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணிபுரியக்கூடிய இடத்தில் உங்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை என்று பணப்புழக்கம் அதிகரிக்கும்.உங்களுக்கு பணத்தை சம்பாதிக்கும் திறன் கூடும். எனவே பணத்தை சேமிக்க கூடிய நிலை உருவாகும்.

ஆரோக்கியத்தை பொறுத்த வரை இன்று சிறப்பான ஆரோக்கியம் உங்களிடம் காணப்படும். ஆற்றல் அதிகரித்து இருக்கக்கூடிய உங்களுக்கு ஆரோக்கியத்தில் குறை ஏற்படாது.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று நீங்கள் விரைவாக எல்லா பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பதட்டம் உங்களிடம் இருந்தாலும் மகிழ்ச்சியும் இருக்கும்.மேலும் விருப்பமான வெளியிடங்களுக்குச் சென்று உங்கள் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வீர்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை நம்பிக்கையோடு செயல்பட்டு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முயற்சி செய்வீர்கள். பணியில் உங்கள் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களிடம் இருக்கும் பணம் போதுமானதாக இருக்கும். பூர்வீக சொத்து அல்லது எதிர்பாராத பண வரவு உங்களுக்கு வந்து சேரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும் இசை கேட்டல், பிரார்த்தனை செய்தல் போல மூலம் மனநிலையை நீங்கள் மாற்றி அமைக்கலாம். இதன் மூலம் ஆரோக்கியமும் மேம்படும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுக்கும். உங்கள் முன்னேற்றத்திற்காக நீங்கள் பாடுபடுவீர்கள். இது வெற்றியை உங்களுக்குத் தேடித் தரும். பிரார்த்தனையின் மூலம் நீங்கள் மன அமைதியை பெற முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அதிர்ஷ்டம் குறைந்த அளவிலேயே இருக்கும். பணிகள் கவனத்தை செலுத்துவதின் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் குறைவாக செலவழிக்க வேண்டும்.உங்கள் சேமிப்பை அதிகரிக்க முயற்சி செய்வது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை குளிர்ச்சியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வதின் மூலம் ஒவ்வாமை ஏற்படும். எனவே உணவு மற்றும் நீரில் கவனத்தை செலுத்துவது மிகவும் அவசியமாகும். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top