Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

16 வயதினிலே படத்தில் நடித்த டாக்டரா இது? – ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்..!

தமிழ் திரையுலகில் என்றுமே தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் வெளி வந்த 16 வயதினிலே படம் உங்களுக்கு நினைவு இருக்கிறதா? கண்டிப்பாக இந்த படம் 80,90 கால மக்களின் மறக்க முடியாத படமாக இருக்கும்.

இந்தப் படத்தில் கமலஹாசனோடு இணைந்து ஸ்ரீதேவி சிறப்பான நடிப்பை வெளியிட்டதை அடுத்து இந்த படம் பெரும் வெற்றியை இருவருக்குமே பெற்றுத் தந்தது. இதனை அடுத்து மேலும்  பட வாய்ப்புகள் இவர்கள் இருவருக்குமே வந்து சேர்ந்தது.

இந்த படத்தில் மயிலு கேரக்டரில் நடித்த ஸ்ரீதேவியின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது. அத்தோடு அந்தப் படத்தில் நடித்த டாக்டர் கேரக்டரை யாரும் எளிதில் மறக்க முடியாது இந்த கேரக்டரை செய்த நடிகரின் பெயர் சத்யஜித்.

1977 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படத்தை பார்த்து அனைவரும் வியந்ததோடு இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் டாக்டராக நடித்த சத்யஜித் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

--Advertisement--

பாரதிராஜா இயக்கத்தில் வெளி வந்த இந்த படத்தில் கமலோடு, ரஜினியும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ரஜினியின் பரட்டை கேரக்டர் இன்றளவும் ரசிகர்களின் மனதில் அப்படியே இருக்கும் என கூறலாம்.

இதில் ஜப்பானியாக நடித்த கமலை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை பட்டையை கிளப்பியிருந்தார். டாக்டராக நடித்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சத்தியஜித் திரைப்பட கல்லூரியில் தங்கம் பதக்கம் வென்றவர் என்பது பலருக்கும் தெரியாது.

இவரை பற்றிய செய்தியை பாரதிராஜா பேப்பரில் பார்த்த பிறகு தான் அவருக்கு டாக்டர் கேரக்டரில் நடிக்கக்கூடிய வாய்ப்பை தந்திருக்கிறார். இருப்பினும் இவருக்கு இந்த படத்துக்கு அடுத்தது போல் தமிழ் படங்கள் சரியாக அமையாததின் காரணத்தால் அவர் ஊரிலேயே தொடர்ந்து சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் இவர் கடைசியாக 2022-ல் ஒரு கன்னட படத்தை இயக்குவது குறித்து செய்திகள் வெளி வந்தது. அதனை அடுத்து இவர் பற்றிய தகவல்கள் ஏதும் ஊடகங்களில் வெளிவரவில்லை.

இந்நிலையில் இவரது அண்மை புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளி வந்து பலராலும் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் ஸ்டைலாக இவர் ஆங்கிலம் பேசுவதை ரசிகர்கள் குறிப்பிட்டு அவர்களுக்குள் பேசி வருவதோடு மயிலு நம்மை விட்டு பிரிந்ததையும் வருத்தத்தோடு கூறி இருக்கிறார்கள்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top