இந்த பதிவுகள் உங்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக்கும். கவனமாக இந்த புதிரை படித்து அதற்கான விடையை கண்டுபிடியுங்கள்.
வாருங்கள், புதிருக்குள் சென்று சிக்குவோம்..!
1: நீங்கள் 200 மீட்டர் உயரமுள்ள ஒரு மாடியின் மீது நின்று கொண்டிருகிறீர்கள்.
2: கீழே இறங்கி வருவதற்கான வழிகள் அடைக்கப்பட்டுள்ளன.
3: உங்களிடம் 150 மீட்டர் நீளமுள்ள கயிறும் ஒரு கத்தியும் மட்டுமே உள்ளது.
4: 200 மீட்டர் உயரமுள்ள கட்டிடத்தின் இரண்டு தளங்களும் தலா 100 மீட்டர் உயரம் உடையவை.
5: மொட்டை மாடியின் முனையில் ஒரு கொக்கி உள்ளது. அதே போல, முதல் தளத்தின் ஓரத்திலும் ஒரு கொக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
சிந்தியுங்கள்..! உங்களிடம் இருப்பதோ 150 மீட்டர் கயிறு. கட்டிடத்தின் உயரமோ 200 மீட்டர். முதல் கொக்கியில் கயிரை மாட்டி கீழே இறங்க முயற்சித்தால் முக்கால்வாசி கட்டிடத்தில் தொங்கி கொண்டிருப்பீர்கள்.
ஒரு வேளை, 100 மீட்டர் இறங்கி வந்து விட்டு முதல் தளத்தில் நின்று கொண்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கீழே இறங்க இன்னும் 100 மீட்டர் கயிறு தேவை.
இப்போது, மொட்டை மாடியில் மாட்டியுள்ள கயிறை உங்களால் எப்படி எடுக்க முடியும். இதுவும் வேலைக்கு ஆகாது.
கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்து யோசியுங்கள்....! - விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
------------ Think Out of BOX ------------
விடை :
படி 1 : உங்களிடம் உள்ள 150 மீட்டர் கயிறை 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் என வெட்டிக்கொள்ள வேண்டும்.
படி 2 : 50 மீட்டர் நீளமுள்ள கயிறை கீழே படத்தில் காட்டியுள்ளது போல சுருக்கு வைத்துக்கொள்ளவேண்டும்.
படி 3 : இப்போது நூறு மீட்டர் உள்ள கயிறை அந்த சுருக்கினுள் விட்டு முதல் கொக்கியில் தொங்க விட வேண்டும்.
படி 4 : இப்போது முதல் தளத்திற்கு பாதுகாப்பாக நீங்கள் இறங்கலாம்.
படி 5 : தற்போது 100 மீட்டர் கயிறை உங்களால் எளிதாக எடுக்க முடியும். இதனை இரண்டாவது கொக்கியில் கட்டி பத்திரமாக கீழே இறங்கிவிடலாம்.