200 மீட்டர் உயர கட்டிடம் - உங்களிடம் 150 மீட்டர் கயிறு மட்டுமே உள்ளது..! - எப்படி கீழே இறங்குவீர்கள்...!
இந்த பதிவுகள் உங்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக்கும். கவனமாக இந்த புதிரை படித்து அதற்கான விடையை கண்டுபிடியுங்கள். வாருங்கள், புதிருக்குள் சென்று சிக்குவோம்..! 1: நீங்கள் 200 மீட்டர் உயரமுள்ள ஒரு மாடியின் மீது நின்று கொண்டிருகிறீர்கள். 2: கீழே இறங்கி வருவதற்கான வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. 3: உங்களிடம் 150 மீட்டர் நீளமுள்ள கயிறும் ஒரு கத்தியும் மட்டுமே உள்ளது. 4: 200 மீட்டர் உயரமுள்ள கட்டிடத்தின் இரண்டு தளங்களும் தலா 100 மீட்டர் உயரம் உடையவை. 5: மொட்டை மாடியின் முனையில் ஒரு கொக்கி உள்ளது. அதே போல, முதல் தளத்தின் ஓரத்திலும் ஒரு கொக்கி கொடுக்கப்பட்டுள்ளது. சிந்தியுங்கள்..! உங்களிடம் இருப்பதோ 150 மீட்டர் கயிறு. கட்டிடத்தின் உயரமோ 200 மீட்டர். முதல் கொக்கியில் கயிரை மாட்டி கீழே இறங்க முயற்சித்தால் முக்கால்வாசி கட்டிடத்தில் தொங்கி கொண்டிருப்பீர்கள். ஒரு வேளை, 100 மீட்டர் இறங்கி வந்து விட்டு முதல் தளத்தில் நின்று கொண்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கீழே இறங்க இன்னும் 100 மீட்டர் கயிறு தேவை. ...